தமிழகம்

திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 162 அரசு வழக்கறிஞர்கள் ராஜினாமா ஏற்பு

கி.மகாராஜன்

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 162 அரசு வழக்கறிஞர்களின் ராஜினாமாவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியின்போது, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் திமுக சட்டத்துறையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்றதும், அரசு வழக்கறிஞர்கள் ராஜினாமா செய்தனர். புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கும் வரை பணியில் தொடருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்நிலையில், திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களின் ராஜினாமாவை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு பிளீடர் எட்வின் பிராபகர், 24 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், 36 கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், 54 அரசு வழக்கறிஞர்களின் ராஜினாமாவையும், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அரசு பிளீடர் பி.திலக்குமார், 9 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், 16 கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், 21 அரசு வழக்கறிஞர்களின் ராஜினாமாவையும் ஏற்று, பொதுத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.

SCROLL FOR NEXT