சென்னை: தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் சோ.சுரேஷ், தமிழக தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அரசு துறைகள், கல்வி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும் என மத்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ஆனால், அரசு கல்லூரிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களையும், அலுவலர்களையும் கட்டாயமாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் நிர்ப்பந்தம் செய்கின்றனர்.
இதனால், கல்வி பணி முற்றிலும் பாதிக்கப்படும். எனவே, குறைந்தபட்சம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க ஆவண செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.