தமிழகம்

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தி பெயர் நீக்கத்தை கண்டித்து பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடுவோம்: செல்வப்பெருந்தகை தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​தில் மகாத்மா காந்​தி​யின் பெயரை நீக்​கியதை கண்​டித்​து, தமிழகத்​திலிருந்து 10 ஆயிரம் பேரை திரட்டி பிரதமர் மோடி​யின் வீட்டை முற்​றுகை​யிடு​வோம் என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​துள்​ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறுதி அளிப்பு திட்​டத்தை பாது​காக்கக் கோரி​யும், இத்​திட்​டத்​தின் பெயரை மாற்​றி, மகாத்மா காந்​தி​யின் பெயரை நீக்​கிய மத்​திய பாஜக அரசைக் கண்​டித்​தும் தமிழ்​நாடு காங்​கிரஸ் சார்​பில் உண்​ணாவிரதப் போராட்டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதற்கு தலைமை தாங்கி செல்​வப்​பெருந்​தகை பேசி​ய​தாவது:

பாஜக​வின் சித்​தாந்​தமே மகாத்மா காந்​தி​யின் பெயரை இந்​திய தேசத்​திலிருந்து அகற்ற வேண்​டும் என்​பது​தான். ஆனால் ஓரா​யிரம் மோடி வந்​தா​லும் காந்​தி​யின் பெயரை இந்​தியா​வின் மக்​கள் மனதில் இருந்து அகற்​றவே முடி​யாது. கரோனா கால​கட்​டத்​தில் ஏழை எளிய மக்​களுக்​கான வரப்​பிர​சாத​மாக அமைந்த திட்​டம்தான் மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்​டமாகும். ஆனால் மத்திய மோடி அரசாங்கம் இந்தத் திட்​டத்தை அகற்றி வரு​கிறது.

பாஜக அரசின் மக்​கள் விரோத செயல்​களை கண்​டித்து பல்​வேறு போராட்​டங்​களை முடித்த பிறகு, இறு​தி​யாக பிரதமர் மோடி வீட்டை முற்​றுகை​யிடும் போராட்​டம் நடத்த இருக்​கிறோம். அதில் தமிழகத்​தில் இருந்து 10 ஆயிரம் பேர் பங்​கேற்​பார்​கள். இவ்​வாறு செல்வப்பெருந்தகை பேசி​னார்.

இந்​தப் போராட்​டத்​தில் சட்​டப்​பேரவை காங்​கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார், முன்​னாள் மாநில தலை​வர் கே.​வி.தங்​க​பாலு, முன்​னாள் எம்​.பி. செல்​லக்​கு​மார், எம்​எல்ஏ துரை சந்​திரசேகர், பொருளாளர் ரூபி மனோகரன், நடிகர் மன்​சூர் அலி​கான், கட்சியின் மாநில துணை தலை​வர்​கள் ஆ.கோபண்​ணா, மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத், மாவட்ட தலை​வர்​கள் முத்​தழகன், சிவ.​ராஜசேகரன், எம்​.எஸ்​.​திர​வி​யம்​ உள்​ளிட்​டோர்​ இப்போராட்டத்தில் கலந்​து ​கொண்​டனர்​.

SCROLL FOR NEXT