மாங்குளம் விலக்கில் சாலையோர பாலம் மீது மோதி விபத்துக்குள்ளான கார். 
Regional01

மானாமதுரை அருகே பாலத்தின் மீது கார் மோதல்: பெண் உட்பட இருவர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

மானாமதுரை அருகே பாலத்தின் மீது கார் மோதியதில் கோவையைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.

மானாமதுரை அருகே உள்ள தெற்கு சந்தனூர் நெடுங் குளத்தைச் சேர்ந்தவர் அய்யப் பன்(40). இவர் கோவை சேரன் மாநகரில் உணவகம் நடத்தி வந் தார். இதனால் குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தார். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 9 பேருடன் இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு காரில் நேற்று சென்றார். காரை குமார்(27) ஓட்டினார்.

காலை 6.30 மணி அளவில் மாங்குளம் விலக்கு அருகே சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாலத்தின் மீது மோதியது. இதில் அய்யப்பன் மகள் ஆர்த்தி(18), உறவினர் பாண்டி(45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் அய்யப்பன், அவரது மனைவி தேவி, மகள் கிரிஜா(17), மகன் திருமலை(16), திருஞானம்(24), வேல்முருகன்(20), கார்த்திகா, ஓட்டுநர் குமார் ஆகிய 8 பேர் காயமடைந்தனர். இவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து மானாமதுரை சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT