தமிழகம்

என்ஐஏ தொடர்ந்த வழக்கில் இருந்து இங்கிலாந்து நபரை விடுவிக்க மறுப்பு

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 2004 முதல் 2009 வரையி​லான கால​கட்​டத்​தில் ஹிஸ்ப் உத் தஹ்ரிர் என்ற தடை செய்​யப்​பட்ட தீவிர​வாத அமைப்​புக்கு நிதி திரட்​டிய​தாக​வும், அந்த அமைப்​புக்​காக சென்​னை​யில் ஆள்​சேர்க்கை நடத்​தி​ய​தாக​வும் இங்​கிலாந்து குடிமகன் அஸிஸ் அஹமது என்​பவரை தேசிய புல​னாய்வு முகமை (என்ஐஏ) அதி​காரி​கள் கடந்த 2024-ம் ஆண்டு கைது செய்​தனர்.

இந்​நிலை​யில் இந்த வழக்​கில் இருந்து தன்னை விடுவிக்​கக் கோரி அஸிஸ் அஹமது சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த மனு மீதான விசா​ரணை நீதிப​தி​கள் அனிதா சுமந்த் மற்​றும் சுந்​தர்​மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்​தது.

அப்​போது நீதிப​தி​கள், தீவிர​வாத அமைப்​புக்கு நிதி திரட்​டியது, ஆட்​சேர்க்​கை​யில் ஈடு​பட்​டது, தீவிர​வாத செயல் எனக்​கூறி அஸிஸ் அகமதுவை வழக்​கில் இருந்து விடுவிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

SCROLL FOR NEXT