தமிழகம்

மாவட்ட, சிவில் நீதிபதி நியமனத் தேர்வு: மாற்றுத் திறனாளிகளுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் நிர்ணயம்

செய்திப்பிரிவு

சென்னை: மாவட்ட நீதிப​தி, சிவில் நீதிபதி நேரடி நியமனங்​களுக்​கான தேர்​வில் மாற்​றுத் திற​னாளி​களுக்கு குறைந்​த​பட்ச தகுதி மதிப்​பெண்களை நிர்​ண​யித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

மாவட்ட நீதிப​தி​கள் நேரடி நியமனம் உயர் நீதி​மன்​றம் வாயி​லாக​வும் சிவில் நீதிப​தி​கள் நேரடி நியமனம் டிஎன்​பிஎஸ்சி வாயி​லாக​வும் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

இதற்​கான தேர்​வு​களில் ஒவ்​வொரு பிரி​வினரும் பெற வேண்டிய குறைந்​த​பட்ச தேர்ச்சி மதிப்​பெண் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, முதல்​நிலை, மெயின் தேர்​வு​களில் குறைந்​த​பட்ச தகுதி மதிப்​பெண் எஸ்​சி, எஸ்டி வகுப்​பினருக்கு 30 சதவீத​மாக​ நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பிசி, எம்​பிசி, டிசி வகுப்​பினருக்கான மதிப்பெண் 35 சதவீத​மாக​வும், பொதுப்​பிரி​வினருக்கான மதிப்பெண் குறைந்பட்சம் 40 சதவீத​மாக​வும் உள்​ளது. அதேநேரம் மாற்​றுத் திற​னாளி​களுக்​கென குறைந்​த​பட்ச தகுதி மதிப்​பெண் நிர்​ண​யிக்​கப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில், மாவட்ட நீதிப​தி, சிவில் நீதிபதி நேரடி நியமனங்​களுக்​கான தேர்​வில் மாற்​றுத் திற​னாளி​களுக்கு குறைந்​த​பட்ச தகுதி மதிப்பெண் 30 சதவீத​மாக நிர்​ண​யிக்​கப்​பட்​டு அறிவிப்பு வெளியாகியுள்​ளது. இது முதல்​நிலைத் தேர்வு மற்​றும் மெயின் தேர்​வுக்கும் பொருந்​தும்.

இதற்​கேற்ப தமிழ்​நாடு மாநில நீதித்​துறைப் பணி​கள் (பணி​யமைப்பு மற்​றும் ஆட்​சேர்ப்​பு) விதி​களில் திருத்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதற்​கான அரசாணையை தமிழக அரசின் உள்​துறை செயலர் வெளி​யிட்​டுள்​ளார்.

எனவே, மாவட்ட நீதிப​தி, சிவில் நீதிபதி பதவி​களுக்​கான நேரடி நியமனங்​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்கு குறைந்​த​பட்ச தகுதி மதிப்​பெண் நிர்​ண​யித்து தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டிருப்​ப​தால் விரை​வில் அப்​பணி​யிடங்​களுக்​கான தேர்​வு​கள் அறிவிக்​கப்​படலாம்​ என எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT