சிவகங்கை: ஜனநாயகன் திரைப்படம் ஓடாததால் தான் விஜய் 3 நாட்களாக தலைமைச் செயலகத்துக்கு வரவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: பழனிசாமியிடம் உண்மை, உழைப்பு, கருணை இருக்கிறது. விஜய் போல வசீகரம், பஞ்ச் டயலாக் பேசி இளைஞர்களை பஞ்சராக்க அவருக்கு தெரியவில்லை. மக்கள் மனதை படிக்க தெரிந்த பழனிசாமிக்கு நடிக்க தெரியவில்லை. அமைச்சர் பதவிக்காகத்தான் சில எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர்.
கரூர் சம்பவத்தில் விஜய்யை காப்பாற்றியவர் பழனிசாமி. ஆனால், அவரை மனிதாபிமானம் இல்லாமல் விஜய் பேசி வருகிறார். அதிமுகவிலிருந்து வேறு கட்சிக்கு சென்றோர் உரிய மரியாதை கிடைக்காமல் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஜனநாயகன் திரைப்படம் ஓடாததால் 3 நாட்களாக முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்துக்கு வரவில்லை. காவல்துறை கட்டமைப்பை வலுப்படுத்தாமல் காவல் மரணங்களை தடுக்க முடியாது. தவெக அரசின் ஆயுட்காலம் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது.