கோப்புப் படம்
சென்னை: ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பா.தினேஷ்குமார் வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு விற்பனை பண்டகசாலைக்கு தரமற்ற வெங்காயம் அனுப்பப்பட்டதாக மதுரவாயல் கடையின் விற்பனையாளர் யுவராணி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது.
இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்து முறையிட்டோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தும், தற்காலிகப் பணி நீக்க ஆணை ரத்து செய்யப்படவில்லை.
எனவே, கூட்டுறவுத் துறையின் செயல்பாட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ரேஷன் கடை பணியாளர்கள் அக்.14-ம் தேதி (இன்று) கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்று, தற்காலிகப் பணிநீக்க ஆணையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.