முதல்வர் ரங்கசாமி

 
தமிழகம்

21-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: கடலில் பால் ஊற்றி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அஞ்சலி

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: சுனாமி 21-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கடலில் பால் ஊற்றி முதல்வர் ரங்கசாமி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி சுனாமி அலை தாக்குதலால் புதுவை, காரைக்காலில் 500-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். கடலோர கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய சுனாமி நினைவுதினம் ஆண்டுதோறும் டிசம்பர் 26-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 21-ம் ஆண்டு நினைவு தினம் இன்று புதுவை அரசு சார்பில் கடற்கரை சாலை காந்தி சிலை பின்புறம் அனுசரிக்கப்பட்டது.

சுனாமி பேரலை தாக்கிய கோர சம்பவங்கள் படங்களாக வைக்கப்பட்டிருந்தது. அங்கு முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் எம்எல்ஏக்கள் மலர் வளையம் வைத்து கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல பல்வேறு மீனவ அமைப்புகள் சார்பில் சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. கடலில் பால் ஊற்றி, மலர் தூவி சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மீனவர்கள் பலரும் சுனாமி நினைவுகளால் கண்ணீருடன் காணப்பட்டனர். பல்வேறு கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT