அன்புமணி நிறுத்தியுள்ள வேட்பாளர்களை நிராகரிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது: அன்புமணி தலைமையிலான அணி, மக்கள் சேவைக்காக இல்லாமல், அதிகாரம் கிடைத்தால் அதன் மூலம் பணம் சம்பாதிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளது. நான் வளர்த்தெடுத்த பிள்ளைகள் இன்று பணத்துக்காக அணி மாறி, கொள்கையற்ற கூட்டத்தில் இணைந்திருப்பது வருத்தமளிக்கிறது. பிறந்தநாள், திருமண நாள் போன்ற முக்கிய தருணங்களில் கூட ஒரு மகனாக தன் கடமையை செய்யாதவர் அன்புமணி.
குறிப்பாக, அண்மையில் நான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சேலம் மருத்துவமனையில் உயிருக்குப்போராடிய நிலையில், ஒரு வார்த்தை கூட நலம் விசாரிக்க வராதவர் அன்புமணி. அன்புமணியின் தலைமையிலான அணி போட்டியிடும் 18 தொகுதிகளிலும் வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வாக்காளர் பெருமக்கள், இவர்களை நிராகரித்து, உண்மையாக உங்களுக்கு சேவை செய்யும் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.