திருச்சியில் நேற்று நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். உடன், பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர். படம்: ர.செல்வமுத்துகுமார்

 
தமிழகம்

“பாஜகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் யாரும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை” - ராம.சீனிவாசன் கருத்து

செய்திப்பிரிவு

திருச்சி: பாஜகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யாரும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை என அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜகவின் மாநில நிர்​வாகி​கள் மற்​றும் மாவட்​டத் தலை​வர்​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம் திருச்​சி​யில் உள்ள அக்கட்சியின் அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில்பாஜக தேசிய செய​லா​ள​ரும், தமிழக பாஜக மேலிடப் பொறுப்​பாள​ரு​மான அரவிந்த் மேனன் தலைமை வகித்​தார். மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் முன்​னிலை வகித்​தார்.

மாநிலப் பொறுப்​பாளர் சுதாகர் ரெட்​டி, மகளிரணி தேசிய தலை​வர் வானதி சீனி​வாசன், முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை, மாநில பொதுச்​செய​லா​ளர் ராம.சீனி​வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்​டத்​தில், தேர்​தலில் பாஜக தோல்விக்​கான காரணங்கள், கட்​சியி​லிருந்து அண்ணா​மலை வில​கல், தமிழகத்தில் பாஜக​வுக்கு 2-ம் கட்​டத் தலை​வர்​களை உரு​வாக்​கு​வது, கட்​சி மறு சீரமைப்பு, திரா​விட அரசி​யல் கட்டமைப்பை உடைப்​பது போன்​றவை குறித்து விவா​திக்​கப்பட்டது.

கூட்​டத்​துக்கு பின்​னர் ராம.சீனி​வாசன் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: பாஜக​வில் இருந்து அண்​ணா​மலை வில​கிய​தால் கட்​சிக்கு பாதிப்பு இல்​லை. பாஜக​விலிருந்து பிரிந்து சென்​றவர்​கள் வெற்றி பெற்​ற​தாக சரித்​திரம் இல்​லை. அவர்​கள் மீண்​டும் தங்​களை பாஜக​வில் இணைத்​துக் கொள்​வார்​கள். அதன்​படி, அண்​ணா​மலை​யும் மீண்​டும் பாஜக​வில் இணை​வார்.

திமுக ஆதர​வுடன் 5 தொகு​தி​களில் வெற்​றி​பெற்ற காங்​கிரஸ், தவெக​வுக்கு ஆதரவு அளித்​து, திமுக முதுகில் குத்​தி​யுள்​ளது. இது அவர்​களது வழக்​கம். காங்​கிரஸுடன் இனி திமுக கூட்​டணி வைத்​தால் திமுக தொண்​டர்​கள் ஏற்​றுக் கொள்​ள​மாட்​டார்​கள். காங்​கிரஸ், கம்​யூனிஸ்ட், விசிக போன்ற கட்​சிகள் திமுக கூட்​ட​ணி​யில் இல்லை என்​றால் ஒரு தொகு​தி​யில் கூட வென்​றிருக்​காது. காரி​யம் முடிந்​தவுடன் திமுகவை கழட்​டி​விட்டு சென்ற கட்சி காங்​கிரஸ்.

இண்​டியா கூட்​ட​ணி​யில் 2024-ல் பிரதமர் வேட்​பாள​ராக ராகுலை ஸ்டா​லின் முன்​மொழிந்​தார். அந்த நன்றி கூட காங்​கிரஸுக்கு இல்​லை. தவெக ஆட்​சி​யில் சட்​டம்​-ஒழுங்கு பிரச்​சினை, போதை கலாச்​சா​ரம் என எது​வும் சரி​யாக​வில்​லை. நிதி​நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளி​யிடு​வ​தாக கூறினர். அதை​யும் வெளி​யிட​வில்​லை. இந்த அரசாங்​கம் தோல்​வியை நோக்கிச் சென்​று​ கொண்​டுள்​ளது. இவ்வாறு கூறினார்.

SCROLL FOR NEXT