தமிழகம்

தாராபுரத்தில் விஜய் பிரச்சாரத்தின்போது சத்யபாமா காதில் தெரிவித்தது என்ன? - அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: தாராபுரம் பிரச்​சா​ரத்​தில் நான் நாடகம் நடத்​தி​ய​தாக கூறு​வது அபாண்​ட​மான குற்​றச்​சாட்​டு. அரசி​யல் காரணத்​துக்​காக அடிப்​படை ஆதா​ரம் இல்​லாமல் சொல்​வதை வன்​மை​யாக கண்​டிக்​கிறேன் என அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​துள்​ளார்.

இடைத்​தேர்​தல் நடக்​கும் தாராபுரத்​தில் நேற்று முன்​தினம் தவெக வேட்​பாளர் சத்​ய​பா​மாவுக்கு ஆதர​வாக முதல்​வர் விஜய் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். அப்​போது சத்​ய​பாமா பேசிக் கொண்​டிருக்​கை​யில் பின்​னால் நின்று கொண்​டிருந்த அமைச்​சர் ராஜ்மோக​னுக்​கு, ஒரு செல்​போன் அழைப்பு வந்​தது. அதை பேசி முடித்​ததும் சத்​ய​பாமா அரு​கில் வந்த ராஜ்மோகன் காதில் எதையோ சொல்​லி​விட்டு நகர்ந்து நின்​றார். சில நொடிகளி​லேயே சத்​ய​பாமா அழத் தொடங்​கி​னார். உடனே அரு​கில் நின்​றிருந்த முதல்​வர் சத்​ய​பா​மாவை தேற்​றி​னார். இது தொடர்​பான வீடியோ இணை​யதளங்​களில் வைரலானது.

இதையடுத்​து, ‘அமைச்​சர் ராஜ்மோகன் நாடகம் நடத்​தி​னார்’ என திமுக, அதி​முக கட்​சிகள் கடுமை​யாக விமர்​சித்​தன. இந்​நிலை​யில், நடிகர் சிவாஜி கணேசனின் 99-வது பிறந்​த​நாளை முன்​னிட்டு அடை​யாறு பகு​தி​யில் உள்ள மணிமண்​டபத்​தில் அவரது சிலைக்கு மரி​யாதை செலுத்​திய பிறகு செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் ராஜ்மோகன் கூறிய​தாவது: தாராபுரத்​தில் நான் நாடகம் நடத்​தி​ய​தாக கூறு​வது மிகப் பெரிய வன்​மம். கொளுத்​தும் வெயி​லில் முதல்​வரும், மக்​களும் வெகுநேர​மாக காத்​திருப்​ப​தால் ஒருங்​கிணைப்​பாளர்​கள் என்னை தொடர்​பு​கொண்டு சத்​ய​பா​மாவை சீக்​கிர​மாக பேசி முடிக்​கச் சொன்​னார்​கள்.

அதைத்​தான் அவரிடம் ‘மேக் இட் பாஸ்ட்’ என்று சொன்​னேன். என் மீது வைக்​கப்​படு​வது அபாண்​ட​மான குற்​றச்​சாட்​டு. அரசி​யல் காரணத்​துக்​காக அடிப்​படை ஆதா​ரம் இல்​லாமல் இவ்​வாறு சொல்​வதை வன்​மை​யாக கண்​டிக்​கிறேன். இது​போன்ற நிகழ்​வு​கள் வழக்​க​மாக நடை​பெறு​வது​தான்.

மு.க ஸ்டா​லின், உதயநிதி ஸ்டா​லின் போன்​றோரின் நிகழ்ச்​சிகளி​லும், திமுக​வின் நூற்​றாண்டு நிகழ்ச்​சி​யிலும்​கூட இது​போன்று நடந்​திருக்​கிறது. சத்​ய​பாமா வலி​யில் பேசி​னார். அரசி​யல் காரணத்​துக்​காக ஒரு பெண்​ணின் கண்​ணீரை தவறாக சித்​தரிக்​கிறார்​கள். இதை ஒரு ஐடி விங் செய்​தால் பரவா​யில்​லை. ஆனால், ஒரு தலை​வர்இப்​படி பேசலாமா? இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT