தமிழகம்

​விஜய் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற ரஜினி

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக முதல்​வ​ராக விஜய் பொறுப்​பேற்​றது குறித்த கேள்விக்​கு, நடிகர் ரஜினி​காந்த் பதில் அளிக்​காமல் சிரித்துக் கொண்டே சென்ற வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது.

நடிகர் ரஜினி​காந்த் சென்​னை​யில் இருந்து விமானம் மூலம் பெங்​களூருக்கு நேற்று சென்​றார். முன்​ன​தாக, சென்னை விமான நிலை​யம் வந்த ரஜினி​காந்​திடம், `தமிழக முதல்​வ​ராக விஜய் பொறுப்​பேற்​றுள்​ளாரே' என்று செய்​தி​யாளர் ஒரு​வர் கேள்வி எழுப்​பி​னார்.

ஆனால், அந்த கேள்விக்​கு, ரஜினி​காந்த் எந்த பதி​லும் சொல்​லாமல், கையெடுத்து கும்​பிட்​டபடி சிரித்துக் கொண்டே விமான நிலை​யத்​துக்குள் சென்​றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT