தமிழகம்

“ஆயிரம் ஆண்டுகள் கடந்து நிற்கும் கம்பீரம் ராஜராஜ சோழன்” - முதல்வர் விஜய் பெருமிதம்

வெற்றி மயிலோன்

சென்னை: “ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயில் மூலம் தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கட்டிடக்கலைச் சிறப்பை உலகிற்குப் பறைசாற்றியவர் ராஜராஜ சோழன்” என முதல்வர் விஜய் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழர்களின் பெருமையையும், தமிழர் கட்டிடக்கலை மற்றும் நிர்வாகத் திறனின் மகத்துவத்தையும் உலகரங்கில் நிலைநாட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா நன்னாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்கள்.

ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயில் மூலம் தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கட்டிடக்கலைச் சிறப்பை உலகிற்குப் பறைசாற்றிய அவரது வரலாற்றுப் பெருமை என்றும் நிலைத்து நிற்கும். தமிழர் பெருமையைப் போற்றுவோம். தமிழர் வரலாற்றையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT