கோப்புப்படம்

 
தமிழகம்

திருவள்ளூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்: வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: தொடர் மழை​யால், திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் ஆரணி ஆற்​றின் குறுக்கே தற்​காலிக தரைப்​பாலம் வெள்ள நீரில் அடித்து செல்​லப்​பட்​டது; குடி​யிருப்​பு​களை சூழ்ந்த ஏரி உபரிநீர் மற்​றும் மழைநீ​ரால் பொது​மக்கள் பல்​வேறு இன்​னலுக்கு உள்​ளா​யினர்.

திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் தொடர் மழை​யால் ஆரணி, கொசஸ்​தலை, கூவம் உள்​ளிட்ட ஆறுகளில் வெள்​ளம் பெருக்​கெடுத்து ஓடு​கிறது. ஆந்​திர மாநிலம் பிச்​சாட்​டூர் அணை உபரிநீர் மற்​றும் பூண்டி ஏரி உபரிநீர், ஆரணி மற்​றும் கொசஸ்​தலை ஆறுகளில் வெள்ள நீரோடு, பெருக்​கெடுத்து ஓடு​கிறது.

இதில், ஆரணி ஆற்​றில் பெருக்​கெடுத்து ஓடும் வெள்ள நீர், ஊத்​துக்​கோட்டை முதல் பழவேற்​காடு வரை உள்ள தடுப்​பணை​களில் பெருக்​கெடுத்து ஓடு​கிறது. அவ்​வாறு பெருக்​கெடுத்து ஓடும் வெள்ள நீரால், பழவேற்​காடு அருகே ஆண்​டார் ​மடம் பகு​தி​யில் உள்ள தற்​காலிக தரைப்​பாலத்​தின் ஒரு பகுதி நேற்று முன் தினம் துண்​டிக்​கப்​பட்டு அடித்து செல்​லப்​பட்​டது.

இதனால், காட்​டூர் - பழவேற்​காடு இடை​யே போக்​கு​வரத்து துண்​டிக்​கப்​பட்​டுள்​ள​தால், அத்​தி​யா​வசிய தேவை​களுக்கு ஆண்​டார்​மடம் பகுதி மக்கள் 20 கிமீ தூரம் சுற்றி பழவேற்​காடு உள்​ளிட்ட பகு​தி​களுக்கு செல்ல வேண்​டிய நிலை ஏற்​பட்​டுள்​ளது.

பூந்​தமல்லி அருகே உள்ள கண்​ணப்​பாளை​யம் ஏரி மழை​யால் நிரம்பி உபரிநீர் வெளி​யேறி வரு​கிறது. அவ்​வாறு வெளி​யேறும் உபரிநீர், உபரிநீர் கால்​வாயையொட்​டி​யுள்ள பானவேடு​தோட்​டம், எஸ்​.பி.இ.மோனோ சிட்​டி, எஸ்​பிஇ மெட்ரோசிட்டி உள்​ளிட்ட பகு​தி​களில் உள்ள 200-க்​கும் மேற்​பட்ட வீடு​களை சூழ்ந்​துள்​ளன. இதனால், அப்​பகு​தி​களில் வசிக்​கும் பொது​மக்கள் பல்​வேறு இன்​னலுக்கு உள்​ளாகி வரு​கின்​றனர்.

மேலும், மீஞ்​சூர் ராஜேஸ்​வரி நகர், கலைஞர் நகர் பகு​தி​களில் மழைநீர் சூழ்ந்​துள்​ள​தால், அப்​பகு​தி​வாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்​கப்​பட்​டுள்​ளது. அதே போல், மீஞ்​சூர் அருகே நாலூர் ஊராட்​சிக்கு உட்​பட்ட கேசவபுரம் பத்​மாவதி நகர் பகு​தி​யில் குடி​யிருப்​பு​களை மழைநீர் சூழ்ந்​துள்​ள​தால், அங்கு வசிக்​கும் 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பெரும் அவதிக்கு உள்​ளாகி​யுள்​ளனர்; திருநின்​றவூர் அருகே நெமிலிச்​சேரி, பாடியநல்​லூர்- பாலாஜி நகர், ஆவடி அருகே உள்ள கோவில்​ப​தாகை உள்​ளிட்ட பகு​தி​களில் குடி​யிருப்பு பகு​தி​கள் மற்​றும் சாலை பகு​தி​களில் தேங்​கி​யுள்ள மழைநீ​ரால் பொது​மக்கள், வாகன ஓட்​டிகள் பல்​வேறு இன்​னலுக்கு உள்​ளாகி​யுள்​ளனர்.

தொடர் மழை​யால், ஆவடி மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட திரு​முல்​லை​வாயல், ஆவடி எச்​.​வி.எப் சாலை ஆகிய இடங்​களில் வசிக்​கும் நரிக்​குறவர் இன மக்கள் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​பட்​டு, அவதி​யுற்று வரு​கின்​றனர். இந்​நிலை​யில், ஆவடி மாநக​ராட்சி சார்​பில் நரிக்​குறவர் இன மக்​களுக்கு அத்​தி​யா​வசிய மளிகை பொருட்​கள் மற்​றும் உணவு​களை வழங்​கும் விழா நேற்று திரு​முல்​லை​வாயல் மற்​றும் ஆவடி எச்​.​வி.எப் சாலை நரிக்​குறவர் இன மக்கள் வசிக்​கும் குடி​யிருப்பு பகு​தி​களில் நடை​பெற்​றது.

இதில், அமைச்​சர் சா.​மு.​நாசர் பங்​கேற்​று, 500-க்​கும் மேற்​பட்ட நரிக்​குறவர் இன குடும்​பங்​களுக்கு அத்​தி​யா​வசிய மளிகை பொருட்​கள் மற்​றும் உணவு​களை வழங்​கி​னார். தொடர்ந்து அவர் ஆவடி மாநக​ராட்சி அலு​வலக வளாகத்​தில், மாநக​ராட்சி சார்​பில் 300-க்​கும் மேற்​பட்ட தூய்மை காவலர்​களுக்கு அத்​தி​யா​வசிய மளிகை பொருட்​களை வழங்​கி​னார்.

பிறகு, அங்கு தூய்மை காவலர்​களுக்​காக நடை​பெற்ற சிறப்பு மருத்​துவ மு​காமை அமைச்​சர் சா.​மு.​நாசர் பார்​வை​யிட்​டார். இந்​நிகழ்​வு​களில், ஆட்​சி​யர் பிர​தாப், ஆவடி மாநக​ராட்சி மேயர் உதயகு​மார்​, ஆணை​யர்​ சரண்​யா உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT