தமிழகம்

நீலகிரி, கோவை உட்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: நீல​கிரி, கோயம்​புத்​தூர், ஈரோடு, சேலம், தரு​மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இன்று (மே 19) இடி​யுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய உயர​தி​காரி வி.ஆர்​.துரை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மேற்கு மத்​தி​யப் பிரதேசம் முதல் தெற்கு உள் கர்​நாடகம் வரை, மத்​திய மகா​ராஷ்டி​ரா, மராத்​வா​டா, வட உள் கர்​நாடகம் வழி​யாக சுமார் 3.1 கி.மீ. முதல் 5.8 கி.மீ உயரத்​தில் ஒரு வளிமண்டல காற்​றழுத்​தத் தாழ்​வுப் பாதை நில​வு​கிறது. இதுத​விர, தெற்கு கடலோர ஆந்​திரப் பிரதேசம் மற்​றும் அதனை ஒட்​டிய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நில​வு​கிறது.

மேலும் தென்​கிழக்கு அரபிக்​கடல் (தெற்கு லட்​சத்​தீவுப் பகு​தியை ஒட்​டிய) பகு​தியி​லிருந்து தெற்கு கடலோர ஆந்​திரப் பிரதேசம் மேல் உள்ள மேலடுக்கு சுழற்சி வரை, கேரளா, தெற்கு உள் கர்​நாடகம் மற்​றும் ராயலசீமா வழி​யாக சுமார் 3.1 கி.மீ. முதல் 5.8 கி.மீ. உயரத்​தில் ஒரு வளிமண்டல காற்​றழுத்​தத் தாழ்​வுப் பாதை நில​வு​கிறது.

இதன் காரண​மாக, தமிழகத்​தில் நீல​கிரி, கோயம்​புத்​தூர், ஈரோடு, சேலம், தரு​மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் செவ்​வாய்க்​கிழமை (மே 19) இடி​யுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும். மேற்​குத் தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் மற்​றும் வட தமிழகத்​தில் ஒரு சில இடங்​களில் மித​மான மழை பெய்​யக்​கூடும். ஏனைய தமிழகத்​தி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் லேசானது முதல் மித​மான பெய்​யக்​கூடும். மே 20-ம் தேதி மேற்​குத் தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

மே 21-ம் தேதி தமிழகத்​தில் ஒரு சில இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

மே 22-ல் மேற்​குத் தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் , வட உள்தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் மித​மான மழை பெய்யக்​கூடும். மே 21, 22 ஆகிய தேதி​களில், தமிழகம், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் அதி​கபட்ச வெப்​பநிலை ஓரிரு இடங்​களில் 2 டிகிரி செல்​சி​யஸ் வரை உயரக்​கூடும். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் செவ்​வாய்க்​கிழமை (மே 19) வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் இடி​யுடன் கூடிய மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. இத்தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT