தமிழகம்

தமிழகத்தில் ஏப்.17 வரை மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

இது தொடர்​பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: ஒடி​சா​வின் உட்​பகு​தி​கள் முதல் மன்​னார் வளை​குடாவரை தெற்கு சத்​தீஸ்​கர், விதர்​பா, மரத்​வா​டாவுக்கு மேல் சுமார் 900 மீட்​டர் உயரத்​தில், வளிமண்டல கீழடுக்கு சுழற்​சி, உள் கர்​நாடகம் மற்​றும் உள் தமிழகம் வழி​யாக ஒரு வளிமண்டல காற்​றழுத்த தாழ்வு பாதை நில​வு​கிறது.

          

இதன் காரண​மாக, இன்று (12-ம் தேதி) கன்​னி​யாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் மற்​றும் அதனை ஒட்​டிய மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் லேசான மழை பெய்​யக் கூடும். 13 முதல் 17-ம் தேதி வரை கன்​னி​யாகுமரி, திருநல்​வேலி மற்​றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் லேசான மழை பெய்​யக் கூடும். இதர தமிழக பகு​தி​களில் வறண்ட வானிலை நில​வக் கூடும்.

தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்தை விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை உயரக் கூடும். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். இவ்​வாறு செய்​திக்​ குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT