தமிழகம்

14 மாவட்டங்களில் 23-ம் தேதி கனமழை வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் சில மாவட்​டங்​களில் 23-ம் தேதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்​ளது.

தமிழகத்தில் இன்று மேற்​குத் தொடர்ச்சி மலை மாவட்​டங்​களிலும், நாளை (நவ.21) வட கடலோர தமிழகத்​தில் லேசான மழையும், 22-ம் தேதி கடலோர தமிழகத்​தில் மித​மான மழையும், 23-ம் தேதி கடலூர், தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், புதுக்​கோட்டை, சிவகங்கை, ராம​நாத​புரம், மதுரை, விருதுநகர், தேனி, தென்​காசி, தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, கன்​னியாகுமரி மாவட்​டங்​களில் இடி, மின்​னல், பலத்த காற்​றுடன் கன மழை பெய்​யக்​கூடும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT