தமிழகம்

தமிழகத்தில் ஏப்.30 வரை மழை பெய்ய வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் இன்​று​ முதல் ஏப். 30-ம் தேதிவரை ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தென் தமிழக கடலோர பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. மேலும் கிழக்கு விதர்பா முதல் குமரிக்​கடல் வரை தெலங்​கா​னா, உள் கர்​நாடகா மற்​றும் தமிழகம் வழி​யாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்​வுப் பாதை சுமார் 900 மீட்​டர் உயரத்​தில், நிலவுகிறது.

இதன் காரண​மாக இன்று (ஏப். 25) முதல் ஏப். 27-ம் தேதிவரை மேற்​குத் தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் மற்​றும் தென் தமிழக கடலோர மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை​யும், 28-ம் தேதி ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை​யும் பெய்ய வாய்ப்​புள்​ளது. 29, 30 தேதி​களில் தமிழகம், புதுச்​சேரி​யில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

உள் தமிழக மாவட்​டங்​களில் இன்​று​ முதல் 27-ம் தேதி வரை அதி​கபட்ச வெப்​பநிலை ஒருசில இடங்​களில் வழக்​கத்தை விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை உயரக்​கூடும்.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக ராம​நாத​புரம் மாவட்​டம் தங்​கச்​சிமடத்​தில் 2 செமீ, மழை பதிவாகியுள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT