தமிழகம்

டெல்​டா மாவட்​டங்​களில்​ இன்​று பலத்​த காற்​றுடன்​ மழை: வானிலை ஆய்​வு மையம்​ தகவல்

செய்திப்பிரிவு

சென்​னை: மேற்​கு தொடர்ச்​சி மலை மாவட்​டங்​கள்​, டெல்​டா மாவட்​டங்​களில்​ இன்​று இடி, மின்​னல்​ மற்​றும்​ பலத்​த காற்றுடன்​ மழை பெய்​ய வாய்ப்​புள்​ள​தாக சென்​னை வானிலை ஆய்​வு மையம்​ தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்​து வெளி​யிடப்​பட்ட அறிக்​கை​: தமிழக கடலோரப் ​பகு​தி​களில்​ கீழ்​மட்​ட வளி மண்​டலத்தில் ஒரு பலவீன​மான காற்​றழுத்​தத்​ தாழ்​வுப்​பாதை நில​வு​கிறது. இதன்​ காரண​மாக இன்​று (ஆக.27) மேற்​கு தொடர்ச்​சி மலை மாவட்​டங்​களில்​ ஓரிரு இடங்​களில்​ இடி மின்​னல்​ மற்​றும்​ மணிக்​கு 40 முதல்​ 50 கி.மீ.​ வேகத்​தில்​ பலத்​த காற்​றுடன்​ கூடிய மித​மான மழை பெய்​யக்​கூடும்​.

செங்​கை, விழுப்​புரம்​, கடலூர்​, கள்​ளக்​குறிச்​சி, திருச்​சி​, அரியலூர்​, பெரம்​பலூர், டெல்​டா மாவட்​டங்​களில்​ ஓரிரு இடங்​களி​லும்​, புது​வை​ காரைக்​கால்​ பகு​தி​களி​லும்​ இடி மின்​னல்​ மற்​றும்​ பலத்​த காற்​றுடன்​ கூடிய லேசானது முதல்​ மித​மான மழை​யும் பெய்​யக்​ கூடும்.

SCROLL FOR NEXT