சென்னை: தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சில விரைவு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது மேலும், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மெமு ரயில் உட்பட 28 ரயில்களின் எண்கள் ஜன.1 முதல் மாற்றப்பட உள்ளன. 102 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் தற்காலிக அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
கொல்லம் - தாம்பரம், நாகர்கோவில் - தாம்பரம், செங்கோட்டை - சென்னை எழும்பூர், எழும்பூர் - குருவாயூர், எழும்பூர் - மங்களூர் சென்ட்ரல், எழும்பூர் - ராமேசுவரம், எழும்பூர் - செங்கோட்டை தினசரி ரயில்கள் உட்பட 65 மெயில், விரைவு, அதிவேக ரயில்களின் வேகம் ஜன.1-ம் தேதி முதல் அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் 5 நிமிடம் முதல் 85 நிமிடங்கள் வரை சேமிக்கப்படும். இத்தகவல், தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.