சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு ரயில்களில் செல்வோர் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 14-ம் தேதி தொடங்குகிறது.
அடுத்த ஆண்டு ஜன.15-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஜன.14-ம் தேதி போகி பண்டிகை வருகிறது. இப்பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்க, 60 நாட்கள் முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி, பொங்கலுக்கு ஊருக்குச் செல்ல, வரும் 14-ம் தேதி முதல் முன்பதிவு தொடங்குகிறது.
இதற்காக ஜன.13-ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர், வரும் 14-ம் தேதியும், ஜன.14-ம் தேதி பயணம் செய்ய விரும்பவோர் வரும் 15-ம் தேதியும், ஜன. 15-ல் பயணம் செய்ய விரும்புவோர் வரும் 16-ம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.
இதேபோல் பண்டிகைக்கு ஊருக்குச் சென்றவர்கள் மறுமார்க்கமாக திரும்பும் வகையில், ஜன.18-ம் தேதி பயணிக்க நவ.19-ம் தேதியும், ஜன.19-ல் பயணிக்க நவ.20-ம் தேதியும் முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.