தமிழகம்

தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் டெல்லியில் 18-ம் தேதி ராகுல் ஆலோசனை

கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்கத் திட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: சட்​டப்​பேரவை தேர்​தல் தொடர்​பாக தமிழக காங்கிரஸ் தலை​வர்​களு​டன் வரும் 18-ம் தேதி டெல்​லி​யில் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்​காந்தி ஆலோ​சனை நடத்த உள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் விரை​வில் அறிவிக்​கப்பட உள்​ளது. அதனால் தேர்​தலுக்கு அரசி​யல் கட்​சிகள் தயா​ராகி வரு​கின்​றன. அதி​முக கூட்​ட​ணி​யில் அக்கட்சித் தலை​வர்​கள் டெல்லி சென்று வரு​வதும், டெல்லி தலை​வர்​கள் தமிழகம் வந்து செல்​வது​மாக பரபரப்​பாக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இதனிடையே காங்​கிரஸில் திமுக​வுடன் கூட்​டணி பேச்​சு​வார்த்தை நடத்த அமைக்​கப்​பட்டக் குழு, முதல்​வர் ஸ்டா​லினை ஒரு முறை சந்​தித்து பேசிய பின்​னர் முன்​னேற்​றம் இல்​லாமல் உள்​ளது. இதனிடையே, விஜய்​யின் ஜனநாயகன் திரைப்பட ஆதரவு கோஷங்​கள் தமிழக மற்​றும் தேசிய காங்​கிரஸார் மத்​தி​யில் வலுப்​பெற்று வரு​கிறது. ‘ஜன​நாயகன்’ பொங்​கல் வைக்​க​வும் காங்​கிரஸார் சிலர் ஏற்​பாடு செய்து வரு​கின்​றனர். அதே போல அதிக இடம், ஆட்​சி​யில், அதி​காரத்​தில் பங்கு என்ற கோஷ​மும் எழுப்​பப்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், தமிழக சட்​டப்​ பேர​வைத் தேர்​தல் தொடர்​பாக தமிழக தலை​வர்​களு​டன் ஆலோ​சனை நடத்த ராகுல்​காந்தி திட்​ட​மிட்​டுள்​ளார். இதன்படி வரும் ஜன.18-ம் தேதி இந்த ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற இருப்​ப​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இதில் பங்​கேற்க முன்​னாள் காங்கிரஸ் காங்​கிரஸ் தலை​வர்​கள், எம்.பி.க்கள், எம்​எல்​ஏக்​கள், தேசிய பொறுப்​பு​களில் இருப்​பவர்​கள் ஆகியோ​ருக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது.

இதில் தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, சட்​டப்​பேரவை காங்​கிரஸ் கட்சித் தலை​வர் ​ராஜேஷ்கு​மார், முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம், முன்​னாள் மாநிலத் தலை​வர்​கள் கிருஷ்ண​சாமி, கே.​வி.தங்​க​பாலு, திரு​நாவுக்​கரசர், கே.எஸ்​.அழகிரி உள்​ளிட்​டோர் பங்​கேற்க உள்​ளனர்.

இந்த ஆலோ​சனைக் கூட்​டத்​தில், தமிழக காங்​கிரஸார் வலி​யுறுத்​தும் ஆட்​சி​யில் பங்​கு, அதிக இடம் பெறுவது தொடர்​பாக​வும், வெற்றி பெற வாய்ப்​புள்ள தொகுதி​கள், மாவட்ட தலை​வர்​கள் நியமனம், தேர்​தல் பிரச்​சார வியூ​கம், தமிழகத்​தில் நடை​பெற உள்ள காங்​கிரஸ் கிராம கமிட்டி மா​நாடுகள், கூட்​டணி பேச்சு​வார்த்தை உள்​ளிட்​டவை குறித்து வி​வா​திக்கப்​பட இருப்​ப​தாகவும் தகவல்​கள் வெளி​யாகியுள்​ளன.

SCROLL FOR NEXT