தமிழகம்

சென்னையில் அக்.10-ல் மாணவர்களுடன் ராகுல் சந்திப்பு: தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் அக்.10-ம் தேதி மாணவர்களை ராகுல்காந்தி சந்திக்கிறார் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது: இந்திய மாணவர்களின் குரல்களைக் கேட்க யாரும் இல்லை. ராகுல்காந்தி மட்டுமே அதனை சரிசெய்து வருகிறார். அந்த வகையில் புனே, இந்தூரில் மாணவர்களைச் சந்தித்த ராகுல், சென்னையில் மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்காக குரல் கொடுக்க உள்ளார்.

இதற்காக அக்.10-ம் தேதி தமிழகம் வரும் ராகுல், ‘மாணவர் குரல்’ என்ற நிகழ்ச்சியின் மூலம், மாணவர் களைச் சந்திக்க இருக்கிறார். மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியை மக்களிடம் நிர்வாகிகள் எடுத்துச் செல்ல வேண்டும். இளைஞர்களை முன்னேற்ற வேண்டும் என நினைப்பவர் ராகுல் காந்தி. அவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்று இந்திய தேசிய காங்கிரஸ் கருதுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT