தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான ஆயத்தக் கூட்டம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால், தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் பங்கேற்றனர்.

 
தமிழகம்

டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை

திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும்; அதிக இடம், ஆட்சியில் பங்கு கேட்க வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல்குறித்த ஆயத்​தக் கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற நிலை​யில், அக்​கூட்​டத்​தில் பெரும்​பாலான நிர்​வாகி​கள் திமுக​வுடன் கூட்​டணி தொடர வேண்​டும், அதே நேரத்​தில் திமுக​விடம் அதிக இடம், ஆட்​சி​யில் பங்​கும் கேட்க வேண்​டும் என்று வலி​யுறுத்​தி​ய​தாக காங்​கிரஸ் வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

தமிழ்​நாடு காங்​கிரஸ் கடந்த 2016-ம் ஆண்டு முதல் திமுக கூட்​ட​ணி​யில் நீடித்து வரு​கிறது. இந்​நிலை​யில் தற்​போது அதிக இடம், ஆட்​சி​யில் பங்கு கோரிக்கை காங்​கிரஸில் வலுப்​பெற்று வரு​கிறது. திமுக கூட்​ட​ணி​யில் கிடைக்​கா​விட்​டால், தவெக​வுடன் கூட்​டணி வைத்து பெறு​வது என மாற்று யோசனை​யும் காங்​கிரஸில் சில தலை​வர்​கள் முன்​வைத்து வரு​கின்​றனர். சமூக வலை​தளங்​களில் பதிவு​களை​யும் பலர் பகிர்ந்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் திமுக​வுடன் கூட்​டணி பேச்சு நடத்த காங்​கிரஸின் தமிழக மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் தலை​மை​யில் 5 பேர் கொண்ட குழு​வும் அமைக்​கப்​பட்​டது. இதன்​தொடர்ச்​சி​யாக ஜனநாயகன் திரைப்​படத்​துக்கு ஆதர​வாக காங்​கிரஸார் பதி​விடு​வதும், ஜனநாயன் பொங்​கல் வைக்க முற்​படு​வது போன்ற செயல்கள் திமுக​வுட​னான கூட்​ட​ணியை முறித்​துக்​கொண்​டு, தவெக​வுடன் கூட்டணி வைப்​ப​தற்​கான ஆயத்தமே என தகவல் பரவியது. இந்த நடவடிக்​கைகள் திமுக தலை​மைக்கு மேலும் எரிச்​சலூட்​டிய​தாக தெரி​கிறது.

இதற்கு முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும் என்று காங்​கிரஸ் தலை​மை​யிடம் செல்​வப்​பெருந்​தகை, ப.சிதம்​பரம் உள்​ளிட்ட தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​ய​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இதன்​தொடர்ச்​சி​யாக சட்​டப்​பேரவை தேர்​தல் ஆயத்த பணி​களை மேற்​கொள்ள அகில இந்​திய காங்​கிரஸ் தலைமை ஆலோ​சனை கூட்​டத்தை கூட்​டி​யுள்​ளது. டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற இக்​கூட்​டத்​துக்கு கட்​சி​யின் அகில இந்​திய தலை​வர் மல்​லி​கார்​ஜூன கார்​கே,மூத்த தலை​வர் ராகுல் தலை​மை​யில் கூட்​டம் நடந்​தது. இதில் தமிழக எம்​.பி.க்​கள், எம்​எல்​ஏக்​கள், தமிழக காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர்​கள் உள்​ளிட்​டோரிடம் தனித்​தனி​யாக கருத்​துகள் கேட்​கப்​பட்​டன.

இதில் பெரும்​பாலானோர் திமுக​வுடன் கூட்​டணி தொடர வேண்​டும் என்​றும், அதே நேரத்​தில் அதிக இடம், ஆட்​சி​யில் பங்கு கேட்க வேண்​டும் என்​றும் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். சில தலை​வர்​கள் தவெக​வுடன் கூட்​டணி வைப்​பது தான் எதிர்​கால காங்​கிரஸ் வளர்ச்​சிக்கு சரி​யாக இருக்​கும் என்​றும் கருத்து தெரி​வித்​துள்​ள​தாக கட்சி வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

கூட்​டத்​தின் முடி​வில் கே.சி.வேணுகோ​பால் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “இந்​தக் கூட்​டத்​தில், மொத்​தம் 41 உறுப்​பினர்​கள் பங்​கேற்​றனர். ஒவ்​வொரு​வரும் தங்​கள் கருத்​துகளை கூறினர். அனை​வரது கருத்​து​களை​யும் தலைமை பரிசீலிக்​கும். ராகுல்​காந்​தி​யும், மல்​லி​கார்​ஜுன கார்​கே​வும் இறுதி முடிவு எடுப்​பார்​கள். தேர்​தல் கூட்​டணி குறித்து அகில இந்​திய காங்​கிரஸ் தலை​மையே முடிவு செய்​யும். கூட்​டணி தொடர்​பாக பொது​வெளி​யில் பேச​வும், சமூகவலைத்​தளங்​களில் பதி​விட​வும் கூடாது என நிர்​வாகி​களிடம்​ அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது” என்​றார்​.

SCROLL FOR NEXT