அமைச்சர் ரகுபதி

 
தமிழகம்

“திமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் காங்கிரஸ் சட்டப்பேரவைக்குள் வர முடியும்” - அமைச்சர் ரகுபதி தடாலடி

செய்திப்பிரிவு

​தி​முக​வுடன் கூட்​டணி வைத்​தால்​தான் சட்​டப்​பேர​வைக்​குள் வர முடி​யும் என காங்​கிரஸ் தலை​மைக்கு தெரி​யும் என மாநில இயற்கை வளங்​கள் துறை அமைச்​சர் எஸ்​.ரகுபதி தெரி​வித்​தார்.

புதுக்​கோட்​டை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: அதி​முக, பாஜக கூட்​டணி என்​பது இடி​யாப்​பச் சிக்​கல் போன்​றது. அதில், யார் பெரிய​வர் என்​பது இது​வரை தெரிய​வில்​லை.

எனவே, அந்​தக் கூட்​ட​ணி​யை​யும், திமுக கூட்​ட​ணி​யை​யும் ஒப்​பிட்​டுப் பேச முடி​யாது. திமுக​வுடன் கூட்​டணி வைத்​தால்​தான் சட்​டப்​பேர​வைக்​குள் வர முடி​யும், அரசி​யல் அந்​தஸ்து கிடைக்​கும் என்​பது காங்​கிரஸ் தலை​மைக்​குத் தெரி​யும். விரை​வில் பேச்​சு​வார்த்​தை​யில் சுமுக முடிவு ஏற்​படும். எங்​கள் தலை​வர் சரி​யான பாதை​யில்​தான் கூட்​ட​ணியை அழைத்​துச் செல்​வார்.

          

தமிழக மக்​களிடம் பணம் கொடுத்​தெல்​லாம் வாக்​கு​களைப் பெற முடி​யாது. சாதனை​களைச் செய்​து, அவற்​றைச் சொல்​லித்​தான் வாக்கு சேகரிக்க முடி​யும். பல தொகு​தி​களில் அதி​முக டெபாசிட் இழக்​கப் போகிறது. தற்​போது திமுக மகளிரணி​யினர் வீடு​வீ​டாக வாக்கு சேகரிக்​கும் பணி​களைத் தொடங்கி விட்​டார்​கள். தேர்​தல் தேதி அறி​விப்​ப​தற்கு முன்பே ஒவ்​வொரு வீட்டு வாசலை​யும் தொட்​டு​விட்டு வந்​திருப்​பது இந்​திய வரலாற்​றிலேயே இல்​லாதது.

திமுகவை நம்பி வரு​வோரை தலைமை அரவணைக்​கிறது. யாருக்கு எந்​தப் பதவியைத் தரு​வது என்​பது திமுக தலை​மைக்​குத் தெரி​யும். தமி​ழ​கத்​தில் சட்​டம்​-ஒழுங்கு பற்றி கேள்வி எழுப்​புவோர், குஜ​ராத், ராஜஸ்​தான் போன்ற மாநிலங்​களுக்​குச் சென்று பார்த்து வந்து சொல்​லலாம். இந்​தத் தேர்​தலில் சவால் எது​வும் இருப்​ப​தைப் போல கண்​ணுக்​குத் தெரிய​வில்லை என்று அகம்​பாவ​மாகச் சொல்ல மாட்​டோம். திமுக எது வந்​தா​லும் சமாளிக்​கும் திறன் படைத்த இயக்​கம்.இவ்​வாறு அவர் கூறி​னார்​.

SCROLL FOR NEXT