தமிழகம்

ராதாத்ரி நேத்ராலயாவின் ‘RADNET 2026’ நிகழ்வில் 155 மருத்துவர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: மருத்துவர்களுக்காக ராதாத்ரி நேத்ராலயா நடத்தும் வருடாந்திர மருத்துவக் கல்வி நிகழ்ச்சியான ‘ராட்நெட் 2026’ (RADNET 2026) நிகழ்வு ஜிஆர்டி கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

கண்களில் அடிக்கடி உண்டாகும் அலர்ஜி மற்றும் கண் சிவத்தல் பிரச்சினைக்கு காரணமாக இருக்கும் கண்ணின் ஒரு பகுதியான யூவியா (Uvea) பற்றி நடந்த இந்த அறிவியல் நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த 155 மருத்துவர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சி குறித்து ராதாத்ரி நேத்ராலயாவின் மருத்துவ இயக்குநர் வசுமதி வேதாந்தம் கூறுகையில், “கண் மருத்துவத் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவருக்கு வழங்கங்கப்படும் 13-வது Dr.TNC வேதாந்தம் நினைவு பரிசு, மருத்துவர் ஜோதிர்மாய் பிஸ்வாஸுக்கு வழங்கப்பட்டது” என்றார்.

மற்றுமொரு மருத்துவ இயக்குநர் பிரவீன் கிருஷ்ணா, “இங்கு நடந்த வருடாந்திர வினாடி வினா போட்டியில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 14 அணிகள் கலந்து கொண்டன. இதில், தமிழ்நாடு கண் மருத்துவ சங்கத்தின் தலைவர் பேராசிரியர், மருத்துவர் விஜயராகவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்” எனத் தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT