சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் இரா.முத்தரசன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 5 மாநிலங்களில் தேர்தல்கள் நடக்கும் வரை அமைதியாக இருந்த மத்திய அரசு, தற்போது வணிக காஸ் சிலிண்டர்களின் விலையை பன்மடங்கு உயர்த்தியுள்ளது.
இதன் காரணமாக உணவு விடுதிகள், ஹோட்டல்கள், டீக்கடைகள் என அனைத்திலும் உணவு பொருட்களின் விலை பன்மடங்கு உயரும். மே 4-ம் தேதிக்கு பிறகு, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
எனவே மத்திய அரசு, வணிக சிலிண்டர்களுக்கான விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு இரா.முத்தரசன் கூறினார்.