தமிழகம்

131-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

செய்திப்பிரிவு

சென்னை: காயிதே மில்​லத் 131-வது பிறந்​த​நாளை முன்​னிட்டு சென்னை திரு​வல்​லிக்​கேணி​யில்​உள்ள அவரது நினை​விடத்​தில் முதல்​வர் விஜய், திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் உள்​ளிட்​டோர் மலர் போர்வை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னர்.

காயிதே மில்​லத் 131-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி சென்னை திரு​வல்​லிக்​கேணி வாலாஜா பெரிய பள்​ளி​வாசல் வளாகத்​தில் உள்ள காயிதே மில்​லத் நினை​விடத்​தில் தமிழக அரசு சார்​பில் முதல்​வர் விஜய் மலர் போர்வை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னார்.

நிகழ்ச்​சி​யில் சட்​டப்​பேரவை தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர், அமைச்​சர்​கள் என்​.ஆனந்த், ஆதவ் அர்​ஜு​னா, கேரள தொழில் துறை அமைச்​சர் பி.கே.குன்​ஞாலி குட்​டி, இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தேசிய தலை​வர் காதர் மொகிதீன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின், சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சி்த் தலை​வர் உதயநிதி மற்​றும் திமுக நிர்​வாகி​கள் காயிதே மில்​லத் நினை​விடத்​தில் மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னர். அதி​முக சார்​பில் முன்​னாள் அமைச்​சர்​கள் பொன்​னையன், கோகுல இந்​தி​ரா, எஸ்​.அப்​துல் ரஹீம், ரமணா.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, அமமுக துணை பொதுச் செய​லா​ளர் ஜி.செந்​தமிழன், விசிக தலை​வர் திரு​மாவளவன், தேமு​திக தலைமை நிலை​யச் செய​லா​ளர் பார்த்​த​சா​ரதி உள்​ளிட்​டோரும் மலர் போர்வை அணி​வித்து மரி​யாதை செலுத்​தினர்.

| படம்:எஸ்.சத்தியசீலன் |

திமுக - காங்​கிரஸ் மோதல்

காயிதே மில்​லத் நினை​விடத்​தில் முதல்​வர் விஜய் மரி​யாதை செலுத்​தி​யதைத் தொடர்ந்​து, திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் மரி​யாதை செலுத்த நேரம் ஒதுக்​கப்​பட்​டிருந்​தது. இதனால், அங்கு ஏராள​மான திமுக​வினர் திரண்​டிருந்​தனர்.

ஸ்டா​லின் வரு​வதற்கு முன்​ன​தாக, தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தனது ஆதர​வாளர்​களு​டன் நினை​விடத்​துக்கு வந்​தார்.

அப்​போது அங்​கிருந்த திமுக​வினர், ‘எங்​கள் தலை​வர் மரி​யாதை செலுத்​திய பிறகு​தான் மற்ற தலை​வர்​கள் உள்ளே செல்ல வேண்​டும்’ என கூறி, செல்​வப்​பெருந்​தகை மற்​றும் காங்​கிரஸ் கட்​சி​யினரை உள்ளே விட மறுத்து தடுத்​தனர்.

இதனால் இரு தரப்​பினருக்​கும் இடையே கடும் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. ஒரு​கட்​டத்​தில் ஆவேசமடைந்த திமுக​வினர், ‘எங்​கள் கூட்​ட​ணி​யில் இருந்து வெற்றி பெற்​று​விட்​டு, இப்​போது துரோகம் செய்​கிறீர்​கள்’ என்று காங்​கிரஸ் கட்​சி​யினரை நோக்கி முழக்​கமிட்​டனர்.

இதையடுத்​து, இருதரப்​புக்​கும் இடையே தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டு பதற்​ற​மான சூழல் நில​விய போதி​லும், செல்​வப்​பெருந்​தகை அமை​தி​யாகக் காத்​திருந்​தார்.

மு.க.ஸ்​டா​லின் வந்து மரி​யாதை செலுத்​தி​ சென்ற பிறகு, செல்​வப்​பெருந்​தகை தனது ஆதர​வாளர்​களு​டன் கா​யிதே மில்​லத் நினை​விடத்​தில் மரி​யாதை செலுத்​தி​னார். இதனால்​ அங்​கு சிறிது நேரம்​ பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT