கோவை/விழுப்புரம்: புதிய தமிழகம், ராமதாஸ் அணி சார்பில் 2-வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் போட்டியிடும், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவையில் நேற்று வெளியிட்டார்.
அதன்படி, ராஜபாளையம்-மு.ரமாதேவி, சிவகாசி - க.காளீஸ்வரி, அருப்புக் கோட்டை - கி.ரகுபதி, திருச்சுழி - கு.குணசேகரன், தூத்துக்குடி - ரா.ரமேஷ், முதுகுளத்தூர் - ச.மலைச்செல்வம், திருவாடனை - சிவ.பாலுச்சாமி, திருவையாறு - வ.வேணு, தாராபுரம் - மா.சின்னசாமி, திண்டுக்கல் - மா.பிரதீப் பாண்டியன், ஆலங்குளம் - அ.உதயக்குமார், பெரம்பலூர் - த.வெங்கடேசன், அந்தியூர் - தா.பெரியசாமி, பல்லாவரம் - அ.தங்கராஜ், ஆலந்தூர் - ஆ.வேலுச்சாமி, பழநி - கு.வாய்க்கால்துரை, லால்குடி - இளஞ்செழியன், மணச்சநல்லூர் - மு.பாலு, ரங்கம் - ஆ.நியூட்டன், திருச்சி மேற்கு - கோ.சண்முகம், துறையூர் - த.ராஜமாணிக்கம், கே.வி.குப்பம் - கு.கந்தன், மடத்துக்குளம் - க.செந்தில்குமார் உள்ளிட்ட 27 பேர் போட்டியிடுகின்றனர்.
ராமதாஸ் அணி
இதேபோல் பாமக (ராமதாஸ் அணி) வெளியிட்ட 2-வது பட்டியலில் திருப்போரூர்- ஏகாம்பரம், உத்திரமேரூர் - தர், கும்மிடிப் பூண்டி- சங்கர், திருவள்ளூர்- வெங்கடேசன், செஞ்சி- கனல் பெருமாள், தருமபுரி- சரவணன், ஜெயங்கொண்டம்- காடுவெட்டி ரவி, செய்யாறு -சீனிவாசன், அந்தியூர்- கோபால், புவனகிரி- பாலமுருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.