பார் கவுன்சில் தேர்தல் தலைமை அதிகாரி ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா, உயர்மட்டக் குழு உறுப்பினர் இ.ஓம் பிரகாஷ் ஆகியோர் தேர்தல் குறித்து நேற்று விளக்கினர்.

 
தமிழகம்

முதன்முறையாக ‘க்யூ-ஆர்’ கோடு முறையில் தமிழகம்-புதுவை பார் கவுன்சிலுக்கு நாளை தேர்தல்

ஓய்வுபெற்ற நீதிபதிகள் 10 பேர் பார்வையாளர்களாக நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: ​முதன்​முறை​யாக ‘க்​யூ-ஆர்’ கோடு முறை​யில் தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சிலுக்​கான தேர்​தல் நாளை நடை​பெற உள்​ளது.

தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சிலுக்கு 5 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை தேர்​தல் நடத்​தப்பட வேண்​டிய நிலை​யில், கடந்த 2018-ம் ஆண்​டுக்​குப் பிறகு உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி தற்​போது நடை​பெறவுள்​ளது.

மொத்​தம் உள்ள 25 உறுப்​பினர்​களில் 2 பெண் உறுப்​பினர்​கள் நியமன முறை​யில் உச்ச நீதி​மன்றஉத்​தர​வுப்​படி அகில இந்​திய பார் கவுன்​சிலால் நியமிக்​கப்​படுவர். மீதமுள்ள 23 உறுப்​பினர்​களை தேர்வு செய்​வதற்​கான தேர்​தல் தமிழகம் மற்​றும் புதுச்​சேரியில் நாளை நடை​பெறவுள்​ளது.

          

இந்த 23 பேரில் குறைந்​த​பட்​சம் 5 பெண் உறுப்​பினர்​கள் தேர்வு செய்​யப்பட வேண்​டும் என்ற நிலை​யில், மொத்​தம் 143 பேர் போட்​டி​யிடு​கின்​றனர். தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் 1 லட்​சத்து 540 வழக்​கறிஞர்​கள் வாக்​களிக்கவுள்​ளனர். முதன்​முறை​யாக க்யூ-ஆர் கோடு முறை​யில் இந்த தேர்​தல் நடத்​தப்​பட​வுள்​ளது.

ஆன்​லைன் மூல​மாக க்யூ-ஆர் கோடுக்​கான படிவத்தை பதி​விறக்​கம் செய்​யும்​ போது, அதில் சம்​பந்​தப்​பட்ட வழக்​கறிஞரின் பெயர், பதிவு எண், வாக்​குப்​பட்​டியல் வரிசை எண், பதிவு செய்​துள்ள வழக்​கறிஞர் சங்​கம், வாக்​களிக்க வேண்​டிய வாக்​குச்​சாவடி விவரங்​கள் இடம்​பெற்​றிருக்​கும்.

ஒரு வழக்​கறிஞர் முன்​னுரிமை அடிப்​படை​யில் 1 முதல் 23 வேட்​பாளர்​களை, அவர்​களின் பெயர்​களுக்கு எதி​ராக 1, 2, 3 என நம்​பரை எழுதி தங்​களது வாக்கை பதிவு செய்​ய​லாம். இதுதொடர்​பாக தேர்​தல் தலைமை அதி​காரி​யும், ஓய்​வு​பெற்ற நீதிப​தி​யு​மான கே.என்​.​பாஷா மற்​றும் பார் கவுன்​சில் தேர்​தல் உயர் மட்​டக்​குழு உறுப்​பினரும், மூத்த வழக்​கறிஞரு​மான இ.ஓம் பிர​காஷ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்த பார் கவுன்​சில் தேர்​தல் பணி​கள் உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி ஓய்​வு​பெற்ற இமாச்​சலப்​பிரதேச உயர் நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி ராஜீவ் ஷக்​தர்தலை​மையி​லான உயர் மட்​டக்​குழு​வின் மேற்​பார்​வை​யில் நடை​பெறுகிறது. தேர்​தலை அமை​தியான முறை​யில் நடத்​திட தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளும் எடுக்​கப்​பட்​டுள்​ளன.

தமிழகத்​தில் 166 வாக்​குச்​சாவடிகளும், புதுச்​சேரி​யில் 2 வாக்​குச்​சாவடிகளும் அமைக்​கப்​பட்​டுள்ளன முதன்​முறை​யாக உச்ச நீதி​மன்​றத்​தில் உள்ள தமிழக வழக்​கறிஞர்​களும் வாக்​களிக்​கும் வகை​யில் வாக்​குப்​பெட்டி டெல்​லிக்​கும் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளது. அதேபோல முதன்முறை​யாக க்யூ-ஆர் கோடு முறை​யில் வாக்​காளர்​களின் விவரங்​கள் சரி​பார்க்​கப்​பட்​டு, தேர்​தல் நடத்​தப்​படு​வ​தால் வழக்​கறிஞர்​களின் விவரங்​கள் நொடிப்​பொழு​தில் சரி​பார்க்​கப்​பட்டு வாக்​குப்​ப​திவு எளிமை​யான முறை​யில் விரை​வாக நடை​பெற அனைத்து நடவடிக்​கைகளும் எடுக்​கப்​பட்​டுள்​ளன.

ஒரு வழக்​கறிஞருக்கு எந்த இடத்​தில் வாக்​குச்​சாவடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளதோ அங்கு மட்​டுமே அவரால் வாக்​களிக்க முடி​யும். சென்​னை​யில் அதி​கபட்​ச​மாக 30 ஆயிரம் வழக்​கறிஞர்​கள் வாக்​காளர் பட்​டியலில் உள்​ளனர். இதில் உயர் நீதி​மன்​றத்​தில் மட்​டும் 28 ஆயிரம் வழக்​கறிஞர்​கள் உள்​ளனர். எனவே சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் 56 வாக்​குச்​சாவடி மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இந்த தேர்​தலை முறையாகக் கண்​காணிக்​கும் வகை​யில் ஓய்​வு​பெற்ற உயர் நீதி​மன்ற மற்​றும் மாவட்ட நீதிப​தி​கள், மூத்த வழக்​கறிஞர்​கள், உயர் நீதி​மன்ற ஓய்​வு​பெற்ற அதி​காரி​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். அதன்படி தேர்தல் பார்​வை​யாளர்​களாக, ஓய்​வுபெற்ற உயர் நீதி​மன்ற நீதிப​திகளான கோகுல்தாஸ் சென்​னைக்கும், ராஜேஸ்வரன் கோவைக்​கும், பி.என்​.பிர​காஷ் திரு​வள்​ளூருக்​கும், பஷீர்அகமது நாமக்​கல்​லுக்கும், சொக்​கலிங்​கம் அரியலூர் மற்​றும் பெரம்​பலூருக்​கும், பாஸ்​கரன் திருச்சி மற்​றும் புதுக்​கோட்​டைக்​கும், கோவிந்​த​ராஜன் மதுரைக்​கும், ஆர்​.என்​.மஞ்​சுளா வேலூருக்​கும், நக்​கீரன் கன்​னி​யாகுமரிக்​கும், பெரிய கருப்​பையா செங்​கல்​பட்​டுக்​கும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

வாக்கு எண்ணிக்கை: ஏப்​.3-ல் தொடங்கி அதி​கபட்​ச​மாக ஒன்​றரை மாதங்​களில் முடிவு​கள் அறி​விக்​கப்​படும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

SCROLL FOR NEXT