மாதிரி படம்

 
தமிழகம்

‘பை ஒன் - கெட் ஒன் ஆபர்’ கொடுத்த புதுச்சேரி மதுக்கடை, பாருக்கு சீல்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்​சேரி அரசின் கலால் விதி​களின்​படி, மதுக்​கடைகளுக்​கான உரிமம் பெற்​றவர்​கள் தங்​களது சொந்த இன்​ஸ்​டாகி​ராம், பேஸ்​புக் மற்​றும் பிற சமூக வலை​தளங்​கள் மூலம் குறிப்​பிட்ட பிராண்ட் மது​பானங்​களை​யும், தங்​கள் உரிமம் பெற்ற இடத்​தை​யும் விளம்​பரப்​படுத்​து​வது தடை செய்​யப்​பட்​டுள்​ளது.

சமீப கால​மாக, இந்த விதி​களை மீறி சில மது​பான கடைகள் இது​போன்ற விளம்​பரத்​தில் ஈடு​படு​வது கலால்​துறைக்கு தெரிய வந்​தது.

கரு​வடிக்​குப்​பத்​தில் இயங்கி வரும் ஒரு மது​பானக் கடை மற்​றும் நெல்​லித்​தோப்​பு, திரு​வள்​ளுவர் சாலை​யில் உள்ள ரெஸ்டோ பார் ஆகியன கலால் விதி​களை மீறி சமூக வலை​தளங்​களில் ‘ஒரு பீர் வாங்​கி​னால் மற்​றொரு பீர் இலவசம்’, ‘3 பீர் வாங்​கி​னால் உணவு இலவசம்’ என வாடிக்​கை​யாளர்​களை கவரும் வகை​யில் விளம்​பரம் செய்​தது உறுதி செய்​யப்​பட்​டது.

இதையடுத்​து, கலால்​துறை துணை ஆணை​யர் மேத்யூ பிரான்​சிஸ் உத்​தர​வின் பேரில், வட்​டாட்​சி​யர் ராஜேஷ் கண்ணா மேற்​பார்​வை​யில் வரு​வாய் ஆய்​வாளர்​கள் மது​பானக் கடை மற்​றும் ரெஸ்டோ பாருக்கு சீல் வைத்​தனர்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT