புதுவை காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருதை டிஜிபி சாலினி சிங்கிடம் வழங்கினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. படம்:எம்.சாம்ராஜ்

 
தமிழகம்

காங்கிரஸ் அரசைவிட 13 ஆண்டுகளில் புதுவைக்கு 4 மடங்கு நிதி வழங்கப்பட்டுள்ளது: அமித் ஷா தகவல்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: கடந்த கால காங்கிரஸ் அரசைவிட புதுச்சேரிக்கு நான்கு மடங்குக்கும் அதிகமன நிதியை கடந்த 13 ஆண்டுகளில் மத்திய அரசு பாஜக வழங்கியுள்ளதாக மத்​திய உள்​துறை அமைச்சர் அமித் ஷா தெரி​வித்​தார்.

தமிழகம், புது​வைக்கு 2 நாள் பயண​மாக மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று முன்​தினம் இரவு திரு​வண்​ணா​மலை வந்​தார். அங்​கிருந்து சாலை மார்க்​க​மாக புதுவை வந்த அவர், ஆளுநர் மாளி​கை​யில் இரவு தங்​கி​னார்.

பின்னர் நேற்று காலை கோரிமேடு காவலர் மைதானத்​தில் நடந்த விழா​வில் புதுவை காவல்​துறைக்கு குடியரசுத் தலை​வரின் வண்​ணக்​கொடி விருதை வழங்கி பேசி​னார். விழா​வில் ஆளுநர் கைலாஷ்​நாதன், முதல்​வர் ரங்​க​சாமி, தற்​காலிக பேர​வைத் தலை​வர் அன்​பழகன், அமைச்​சர்​கள் நமச்​சி​வா​யம், மல்​லாடி கிருஷ்ணா​ராவ், ராஜவேலு, சிவ​கொழுந்​து,ராஜசேகர் மற்​றும் எம்​எல்​ஏக்​கள் மற்றும் அதி​காரி​கள் பங்​கேற்​றனர்.

விழா​வில் அமித் ஷா பேசி​ய​தாவது: புதுவை மாநிலத்​தில் காவல் துறை சட்​டம் ஒழுங்கை பராமரிப்​ப​தில் கடின உழைப்​பை​யும், அர்ப்​பணிப்​பை​யும் அளித்து வரு​கிறது. குடியரசுத் தலை​வரின் வண்​ணக்​கொடி விருது பெருமை தரக்​கூடியது. புதுவை காவல் துறை​யில் 5 ஆயிரம் பேர் மட்​டுமே இருந்​தா​லும், மண்​ணின் ஆன்​மிகம், பாரம்​பரி​யம், மரபு ஆகிய​வற்​றுடன் சட்​டம் ஒழுங்​கும் சிறப்​பாக பராமரிக்​கப்​படு​கிறது.

யூனியன் பிரதேசங்​கள் பலப்​படுத்​தப்பட வேண்​டும் என்​பது​தான் பிரதமர் மோடி​யின் தொலைநோக்கு பார்​வை. இதன் ஒரு பகுதியாக புது​வை​யில் ரூ.2,500 கோடி​யில் சாலை விரி​வாக்க திட்​டம், ரூ.2,200 கோடி​யில் காரைக்​கால் தேசிய நெடுஞ்​சாலை விரி​வாக்​கம், புதுவை விமான நிலை​யம் 34 மீட்​டர் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 1950 முதல் 2014 வரை புதுவைக்கு ரூ.35 ஆயிரம் கோடி மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2014 முதல் 2026 வரை பிரதமர் மோடி அரசு, ரூ.13,762 கோடி வழங்கியுள்ளது. 12 ஆண்டுகளில் 4 மடங்கு நிதியை பிரதமர் மோடி அரசு புதுவைக்கு வழங்கியுள்ளது. கடந்த 9 ஆண்​டு​களில் மட்​டும்

ரூ.39 ஆயிரம் கோடி நலத்​திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளன. 7.7 லட்​சம் மக்​கள் பயனடைந்​துள்​ளனர். பிரதமர் மோடி அரசு உங்​களின் தோளோடு தோள் நின்று புதுவை மாநில வளர்ச்​சிக்​கும், முன்​னேற்​றத்​துக்​கும் உறு​துணை​யாக இருக்​கும். இவ்​வாறு பேசி​னார்.

தேசியக்கொடி ஊர்வலம்: இதனிடையே சுதந்​திர தினத்தை முன்​னிட்டு அனைத்து வீடு​களி​லும் தேசி​யக்​கொடியை ஏற்ற வேண்​டும் என்​பதை வலி​யுறுத்தி புதுவை ராஜீவ்​காந்தி சிலை அருகே தேசி​யக்​கொடி ஊர்​வலத்​துக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. இதனை தொடங்கி வைக்க வந்த அமித் ஷாவிடம் காவி நிறத்​திலான கொடியை பாஜக நிர்​வாகி​கள் கொடுத்​தனர். இதை ஏற்க மறுத்த அவர், “தேசி​யக்​கொடிதான் வேண்​டும்” என்​றார். இதையடுத்து தேசி​யக்​கொடியை கொடுத்த பிறகே ஊர்​வலத்தை தொடங்கி வைத்​தார்.

இந்​நிகழ்​வில் அமைச்​சர் நமச்​சி​வா​யம், பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்​மல் குமார் சுரானா, மாநிலத்​ தலை​வர் ராமலிங்கம் உள்​ளிட்டோர் பங்கேற்றனர். இதன்​பிறகு அமித் ஷா டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார்.

விழாவில் மயங்கி விழுந்த போலீ​ஸார்: புது​வை​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா கலந்து கொண்ட நிகழ்​வில் சுமார் 100-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் அணிவகுப்பு நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றனர். இதற்​காக அவர்​கள் நேற்று காலை 6 மணிக்கு வரவழைக்​கப்​பட்​டனர். விழா முடி​யும் வரை அதாவது 10 மணி வரை அவர்​கள் வெயி​லில் நிற்க வைக்​கப்​பட்​டனர்.

விழா மேடை​யில் சிறப்பு விருந்​தினர்​கள் பேசி முடித்து விருதுகள் வழங்​கும் வரை அவர்​கள் தொடர்ச்​சி​யாக 4 மணி நேரம் கடும் வெயி​லில் நிற்க வைக்​கப்​பட்​ட​தால் மைதானத்​தில் நின்றிருந்த ஆண், பெண் போலீ​ஸார் பலர் திடீரென மயங்கி விழுந்​தனர். இதையடுத்து அவர்​கள் முதலுதவிக்கு சக போலீஸாரால் அழைத்​துச் செல்​லப்​பட்​டனர். புதுவை காவல் துறைக்கு விருது வழங்​கும் விழா​வில் காவலர்​கள்​ மயங்​கி விழுந்​த நிகழ்​வால் அங்கு​ சிறிது நேரம்​ பரபரப்​பு ஏற்​பட்​டது.

SCROLL FOR NEXT