தமிழகம்

​புதுச்சேரியில் தி​முக, விசிக, இந்திய கம்​யூ. போட்டி​யிடும் 6 தொகுதிகளில் காங்​கிரஸார் மனு

செ.ஞானபிரகாஷ்

புதுச்​சேரி: புதுச்​சேரி​யில் நேற்று முன்​தினம் வேட்பு மனு தாக்​கல் முடிந்​தது. மனு தாக்​கல் முடிந்​து, நீண்ட இழுபறிக்​குப் பிறகு இண்​டியா கூட்​ட​ணி​யில் ஒரு உடன்​பாடு ஏற்​பட்​டது.

அதன்​படி காங்​கிரஸூக்கு 16, திமுக மற்​றும் கூட்​ட​ணிக்கு 14 இடங்​கள் ஒதுக்​கப்​பட்​டன. திமுக பெறும் 14-ல் இருந்து விசிக, இந்​திய கம்​யூனிஸ்​டுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்​கப்​பட்டுள்​ளது.

16 தொகு​தி​களை பெற்​றிருக்​கும் காங்​கிரஸ், திமுக போட்​டி​யிட இருக்​கும் 4 தொகு​தி​களி​லும் கூடு​தலாக மனு தாக்​கல் செய்​துள்​ளது. ஆனால் திமுக தாங்​கள் பெற்ற 13 தொகு​தி​களுக்கு மட்​டுமே மனு தாக்​கல் செய்​துள்​ளது. வேட்பு மனுத் தாக்​கலுக்​குப் பிற​கான ஒப்​பந்​தத்​தின்​படி காங்​கிரஸ் மனு​தாக்​கல் செய்​துள்ள 4 தொகு​தி​களில் வாபஸ் பெற வேண்​டிய சூழல் உள்​ளது.

          

இதே​போல் தட்​டாஞ்​சாவடி (காங்​கிரஸ் வைத்​திலிங்​கம்-இந்​திய கம்​யூனிஸ்ட் சலீம்), உழவர்​கரை (காங்​கிரஸ் சிவசங்​கரன் - விசிக செல்​வபுஷ்பல​தா) தொகுதிகளில் ஒரே கூட்​ட​ணிக்​குள் 2 மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

கூட்​டணி உடன்​படிக்​கை​யைத் தாண்​டி, கூடு​தலாக தாக்​கல் செய்​துள்ள மனுக்​களை காங்​கிரஸ் வாபஸ் பெறாவிட்டால் ‘இண்​டியா கூட்​ட​ணி’ என்று அறிவிக்​கப்​பட்​டது புதுச்​சேரி​யில் பெயரள​விலேயே இருக்​கும். இந்​தச் சிக்​கலைத் தவிர்க்க திமுக, காங்​கிரஸ் தலைமை குறிப்​பிட்ட தொகு​திகளில் ஒப்​பந்​தத்​தின் படி​யான வேட்பாளர்​கள் தொடர, மற்ற வேட்பாளர்களின் மனுவை வாபஸ் பெற அறி​வுறுத்​தி​யுள்​ளனர்.

இதனிடையே ‘உழ​வர்​கரை​யில் விசிக போட்​டி​யிடும்’ என்று திமுக தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதாவது, தங்​களுக்​கான 14 தொகு​தி​களில் ஒன்றை விசிக​வுக்கு தரு​வ​தாக தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக விசிக தலை​வர் திரு​மாவளவன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “ஊசுடு, நெட்​டப்​பாக்​கம், உழவர்​கரை என 3 தொகு​தி​களில்​ ​நாங்​கள்​ தனித்​துப்​ போட்​டி​யிடு​கிறோம்​. மற்​ற தொகு​தி​களில்​ மதச்​சார்​பற்​ற கூட்​ட​ணிக்​கு ஆதர​வு தெரிவிக்​கிறோம்​” என்​று தெரிவித்​திருக்​கிறார்​.

மார்க்​சிஸ்ட் கம்​யூ. தனி​யாக 4 தொகு​தி​களில் போட்டி: இந்​தச் சூழலுக்கு மத்​தி​யில் மார்க்​சிஸ்ட் கட்சி கூட்​ட​ணியை விட்டு வெளி​யேறி விட்​டது. அக்​கட்சி தனி​யாக போட்​டி​யிட திட்​ட​மிட்டு லாஸ்​பேட்​டை, திரு​புவனை, முத்​தி​யால்​பேட்​டை, உழவர்​கரைஆகிய தொகு​தி​களில் மனு தாக்​கல் செய்​துள்​ளது.

SCROLL FOR NEXT