வைகறை வாணன்
சென்னை: சென்னையில் வசித்து வந்த பதிப்பாளரும் கவிஞருமான வைகறை வாணன் 77 வயதில் காலமானார்.
தமிழின் முன்னணி மற்றும் முன்னோடிப் பதிப்பாளர்களுள் ஒருவர் வைகறை வாணன். பொன்னி, சாளரம் போன்ற புகழ்பெற்ற பதிப்பகங்களை நடத்தியவர். தமிழ் வாசிப்பு மற்றும் புத்தக உலகிற்குப் பெரும் பங்காற்றியுள்ளார்.
தமிழ் இலக்கிய உலகில் புத்தகப் பதிப்பு, அச்சிடல் துறையில் மிக நீண்ட அனுபவம் கொண்டவர். இவருடைய தெலுங்கானா போராட்டம் என்கின்ற நூல் தமிழ் பதிப்பு துறையில் மிக முக்கியமான நூலாகும். 77 வயதாகும் வைகறை வானனுக்கு மனைவியும் ஒரு மகனும் உண்டு சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார்.