சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால், செங்குன்றம் குமரன் நகரில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதியில் சிக்கி இருந்த மக்களை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் படகு மூலம் மீட்டனர். |படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

 
தமிழகம்

சென்னை, புறநகரில் தொடர் மழை: நீர் வடியாத பகுதிகளில் பொதுமக்கள் அவதி

செய்திப்பிரிவு

சென்னை: தொடர் மழை​யால் நீர் வடி​யாத பகு​தி​களில் வசிக்​கும் மக்​கள் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். வெள்​ளம் சூழ்ந்த பகு​தி​யில் சிக்​கிய 30-க்​கும் மேற்​பட்​டோர் படகு​கள் மூலம் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டனர்.

வங்​கக் கடலில் உரு​வான டிட்வா புயல் காரண​மாக, சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் கடந்த நவ.29-ம் தேதி முதல் மழை பெய்து வரு​கிறது. கடந்த டிச.1, 2 தேதி​களில் அதி​க​னமழை பெய்து வரு​கிறது.

இதன் காரண​மாக, மாநகர் மற்​றும் புறநகர் பகு​தி​களில் பல்​வேறு இடங்​களில் குடி​யிருப்​பு​களை மழைநீர் தேங்​கி​யுள்​ளது. இதனால், அப்​பகு​தி​களில் பொது​மக்​களின் இயல்பு வாழ்க்கை பாதிக்​கப்​பட்​டது.

குறிப்​பாக, மாதவரம் அடுத்த வட பெரும்​பாக்​கம் சாலை, திரு​வொற்​றியூர் ராஜாஜி நகர், வியாசர்​பாடி முல்​லைநகர், திரு.​வி.க.நகர் மண்​டலம், காந்​திநகர், வாட்​டர் ஒர்க்ஸ் சாலை, தேனாம்​பேட்டை மண்​டலம், டிரஸ்ட் புரம், அண்​ணாநகர் மண்​டலம் மில்​லர்ஸ் சாலை, சோழிங்​கநல்​லூர் மண்​டலம், கண்​ணகி நகர், அம்​பத்​தூர் தொழிற்​பூங்​கா​வின் சில பகு​தி​கள், பட்​டாளம் ஆஞ்​சநேயர் கோயில் பகு​தி, புளியந்​தோப்​பில் சில சாலைகள் உள்​ளிட்​ட​வற்​றில் மழைநீர் தேங்​கி​யுள்​ளது.

செங்​குன்​றம் பகு​தி​யில் மழைநீர் சூழ்ந்​த​தால், அப்​பகு​தி​யில் வசித்த 30-க்​கும் மேற்​பட்​டோரை பைபர் படகு​கள் மூலம் பேரிடர் மீட்பு படை​யினர்

மீட்​டனர். ஓட்​டேரி பகு​தி​யில் கனமழை​யால் வீடு இடிந்​த​தில் 3 பேர் காயமடைந்து மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

துணை முதல்வர் ஆய்வு: சென்னை எழில​கத்​தில் உள்ள மாநில அவசர கட்​டுப்​பாட்டு மையத்​தில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று நேரில் ஆய்வு செய்​தார். அப்​போது, சென்னை மற்​றும் தமிழகம் முழு​வதும் தொடர் மழை​யால் ஏற்​பட்ட பாதிப்​பு​கள், உயி​ரிழப்​பு​கள், கால்​நடைகள் இறப்​பு, நீரில் மூழ்​கி​யுள்ள பயிர்​கள் சேதம், நீர்​நிலைகளில் நீர் இருப்பு நில​வரம் உள்​ளிட்​டவை குறித்து அதி​காரி​களிடம் கேட்​டறிந்​தார்.

சென்னை மாநகரில் மழைநீர் தேங்​கிய பகு​தி​களில் ராட்சத மோட்​டார்​கள் மூலம் மாநக​ராட்சி சார்​பில் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. பாதிக்​கப்​பட்ட பகு​தி​களில் நேற்று ஒரே நாளில் மாநக​ராட்​சி​சார்​பில் 2,74,600 பேருக்கு காலை உணவு, 3,51,300 நபர்​களுக்கு மதிய உணவும் வழங்​கப்​பட்​டது.

பொது​மக்​களுக்கு நோய்த்​தொற்று பாதிப்பு ஏற்​ப​டா​மல் தவிர்க்​கும் வகை​யில், நேற்று 103 இடங்​களில் மழைக்​கால சிறப்பு மருத்​துவ முகாம்​கள் நடத்​தப்​பட்​டன.

பொது​மக்​களை மீட்​ப​தற்​காக தேசிய பேரிடர் மீட்​புப் படை​யினர் 300 பேர், மாநில பேரிடர் மீட்​புப் படை​யினர் 50 பேர் தயார் நிலை​யில் உள்​ளனர்.

மழை​யின் காரண​மாக விழுந்த 64 மரங்​களும் வெட்டி அகற்​றப்​பட்​டுள்​ளன. சென்​னை​யில் உள்ள 22 சுரங்​கப் பாதைகளில் மழைநீர்த் தேக்​கம் இன்றி போக்​கு​வரத்து சீராக உள்​ளது என மாநக​ராட்சி அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

கனமழை காரண​மாக கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்​தில் மாநக​ராட்சி சார்​பில் புதி​தாக அமைக்​கப்​பட்டு விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட 4 குளங்​களில் நீர் நிறைந்து காணப்படுகிறது.

இதன் காரண​மாக, அப்​பகு​தியை சுற்​றி​யுள்ள கிண்​டி, 5 பர்​லாங் சாலை, மடு​வின் கரை, வேளச்​சேரி குடி​யிருப்பு பகு​தி​களில் மழைநீர் தேக்​கம் ஏற்​படு​வது தவிர்க்​கப்​பட்​ட​தாக மாநக​ராட்​சி அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை: தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (4-ம் ேததி) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT