தமிழகம்

பைக் மீது தண்ணீர் லாரி மோதி முதியவர் உயிரிழப்பு - லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

மேடவாக்கம்: கோவிலம்​பாக்​கம் அருகே எஸ்​.​கொளத்​தூர் பகுதியைச் சேர்ந்​தவர் கருப்​பையா (75). இவர் நேற்று முன்​தினம் மாலை பைக்​கில் எஸ்​.​கொளத்​தூர் பிர​தான சாலை வழி​யாக சென்​று ​கொண்​டிருந்​தார்.

அங்​கன்​வாடி அருகே சென்​ற​போது எதிரே வந்த தண்​ணீர் லாரியால் நிலை​தடு​மாறி கீழே விழுந்​துள்​ளார். அந்த நேரத்​தில் தண்​ணீர் லாரி​யின் சக்​கரம் அவர் மீது ஏறிய​தில் சம்பவ இடத்திலேயே உயி​ரிழந்​தார். இந்த சம்​பவத்​தால் ஆத்​திரமடைந்த அப்​பகுதி இளைஞர்​கள் எஸ்​.கொளத்​தூர் ஏரி அருகே திரண்​டனர். அங்கு கைவிடப்​பட்ட விவ​சாயக் கிணறுகளி​லிருந்து தண்​ணீர் எடுத்து விற்​பனைக்​காகச் சென்​று​கொண்​டிருந்த தண்​ணீர் லாரிகளை​ மடக்​கிப் பிடித்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

அவர்கள், “இப்​பகு​தி​யில் அனு​ம​தி​யின்றி நிலத்​தடி நீர் உறிஞ்சப்பட்டு தண்​ணீர் லாரி​கள் மூலம் எடுத்​துச் செல்லப்படுவதால் நிலத்​தடி நீர்​மட்​டம் குறை​யும் அபா​யம் உள்ளது. குடி​யிருப்​பு​கள் நிறைந்த பகு​தி​களில் லாரி​கள் வேக​மாக இயக்​கப்​படு​வ​தால் தொடர் விபத்​துகள் ஏற்​படு​கின்றன. எனவே இப்​பகு​தி​யில் தண்​ணீர் லாரி​களின் இயக்​கத்​துக்கு தடைவிதிக்க வேண்​டும்” என வலி​யுறுத்​தினர்.

மேட​வாக்​கம் போலீ​ஸார், “தண்​ணீர் லாரி​களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்​கப்​படும், அதிவேக​மாக இயக்​கப்​படும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்​றும் உறுதியளித்​தனர். இதையடுத்து சிறைபிடிக்​கப்​பட்ட லாரி​களை இளைஞர்​கள் விடு​வித்தனர்.

SCROLL FOR NEXT