சென்னை: தேர்தல் நடைபெறும் ஏப்.23-ம் தேதி பொது விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்.23-ம் தேதி நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு, ஏற்கெனவே தனியார் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.23-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச்செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில், தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.23-ம் தேதி நடைபெறுகிறது. செலாவணி முறிச்சட்டத்தின் படி அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்