தமிழகம்

ரேஷன் கடைகள், கிடங்குகளை ஆய்வு செய்ய பொது விநியோகத் திட்ட செல்போன் செயலி தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: ரேஷன் கடைகள், கிடங்​கு​களை தணிக்கை செய்​வதற்​காக பொது விநி​யோகத் திட்ட செல்​போன் ஆய்வு செயலியை அமைச்​சர் ப.வெங்​கடரமணன் தொடங்கி வைத்​தார்.

பொது​விநி​யோக திட்​டம் குறித்த ஆலோ​சனைக் கூட்​டம் சென்னை அண்ணா நிர்​வாகப் பணி​யாளர் கல்​லூரி கூட்ட அரங்​கில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது.

இதற்கு உணவுத்​துறை அமைச்​சர் ப.வெங்​கடரமணன், கூட்​டுறவுத் துறை அமைச்​சர் வ.காந்​தி​ராஜ் ஆகியோர் தலைமை வகித்​தனர்.

இதில், கூட்​டுறவுத் துறை செயலர் பெ.அ​மு​தா, கூட்​டுறவுச் சங்​கங்​களின் பதி​வாளர் ஜி.ல​தா, குடிமைப்​பொருள் வழங்​கல் குற்​றப்​புல​னாய்​வுத் துறை காவல்​துறை தலை​வர் ரூபேஷ் குமார் மீனா மற்​றும் துறை​சார்ந்த அலு​வலர்​கள் பலர் கலந்​து​கொண்​டனர்.

மேலும், மாவட்ட வழங்​கல் மற்​றும் நுகர்​வோர் பாது​காப்பு அலு​வலர்​கள், மாவட்ட துணைப்​ப​தி​வாளர்​கள் உள்​ளிட்​டோரும் பங்​கேற்​றனர்.

இந்​தக் கூட்​டத்​தில் புதிய ரேஷன் குடும்ப அட்​டைகளுக்​கான விண்​ணப்​பங்​களுக்கு தீர்வு காணுதல், புதிய ரேஷன் கடைகள் திறப்​பு, ரேஷன் கடைகளில் தணிக்கை மேற்​கொள்​ளுதல் மற்​றும் அத்​தி​யா​வசி​யப் பொருட்​கள் கைப்​பற்​று​தல் ஆகியவை குறித்து ஆய்வு செய்​யப்​பட்​டன.

ரேஷன் கடைகள் மற்​றும் கிடங்​கு​களை துறை​சார்ந்த அலு​வலர்​கள் தணிக்கை செய்ய ஏது​வாக, பொது விநி​யோகத்​திட்ட செல்​போன் ஆய்வு செயலி உரு​வாக்​கப்​படும் என்று சட்​டப்​பேர​வை​யில் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

அதன்​படி, இந்​தச் செயலியை அமைச்​சர் ப.வெங்​கடரமணன் தொடங்கி வைத்​தார். இந்த செயலி ரேஷன் கடைகள், கிடங்​கு​களில் தணிக்​கைப் பணி​களை எளி​தாக்​கி, அவற்றை முறை​யாகக் கண்​காணிக்க உதவும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT