தமிழகம்

புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.22 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழு​வதும் கோயில்​களுக்​குச் சொந்​த​மான ஆக்​கிரமிப்பு சொத்​துகளை மீட்​கும் நட​வடிக்​கைகளை இந்து சமய அறநிலை​யத் துறை தீவிரப்​படுத்தி வரு​கிறது.

அதன் ஒரு பகுதி​யாக சென்னை புரசைவாக்கம் கங்​காதரேஸ்வரர் கோயிலுக்​குச் சொந்​த​மான ரூ.21.88 கோடி மதிப்பிலான 22,800 சதுரடி, 2,134 சதுரடி நிலங்​கள் தனிநபர்​களால் ஆக்​கிரமிக்​கப்​பட்​டிருந்​தது.

இதையடுத்து, சென்னை மண்​டல இணை ஆணை​யர் நீதி​மன்​றத்​தில் தொடர்ந்த வழக்​கில், இந்து சமய அறநிலை​யத் துறை சட்​டப்​பி​ரிவு 78(1)-ன்

கீழ் ஆக்​கிரமிப்​பாளர்​களை வெளியேற்ற உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது. இதை தொடர்ந்து, ஆக்​கிரமிப்​பு​கள் அகற்​றப்​பட்டு நிலங்​கள் கோயில் நிர்​வாகத்​தின் கீழ் கொண்​டுவரப்​பட்​டன.

கோயில் செயல் அலு​வலர் மா.ஆட்சி சிவபிரகாசம் முன்​னிலை​யில், தனி வட்​டாட்​சி​யர் சரவணன், மேலா​ளர் எஸ்.தன​சேகர், சென்னை மண்​டலம்-1 உதவி ஆணை​யர் புவனேஸ்வரி, எழுத்​தர் வெற்றி ஆகியோர் இதில் ஈடு​பட்​டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT