தமிழகம்

2 முறை சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு காலமானார்

செய்திப்பிரிவு

கோவை: இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்​தாள​ரும், கவிஞரு​மான புவியரசு கோவை​யில் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 96.

கோவை​யில் வசித்து வந்​தவர் கவிஞர் புவியரசு. இவரது மனைவி, மகன் இறந்​து​விட்ட நிலை​யில், 2 மகள்​கள் உள்​ளனர். இந்​நிலை​யில், வயது மூப்பு காரண​மாக நேற்று காலை அவர் உயி​ரிழந்​தார். அவரது இறு​திச் சடங்​கு​கள் இன்று (ஜூலை 1) காலை 9 மணிக்கு பெரிய​நாயக்​கன்​பாளை​யத்​தில் உள்ள பிரிக்​கால் எரியூட்டு மயானத்​தில் நடை​பெறுகிறது.

புவியரசு மறைவுக்கு இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் கோவை மாவட்ட செய​லா​ளர் சி.சிவ​சாமி, தமிழ்​நாடு கலை இலக்​கிய பெரு​மன்​ற மாவட்ட செய​லா​ளர் ப.பா.ரமணி மற்​றும் எழுத்​தாளர்​கள், கலை இலக்​கிய செயற்​பாட்​டாளர்​கள் இரங்​கலை தெரி​வித்து வரு​கின்​றனர். திருப்​பூர் மாவட்​டம் உடுமலை அருகே லிங்​கம​நாயக்​கன்​புதூர் கிராமத்​தில் பிறந்​தவர் புவியரசு.

பெற்​றோர் வைத்த பெயர் ஜெக​நாதன். தமிழ் மீது கொண்ட பற்று காரண​மாக, புவியரசு என தனது பெயரை மாற்​றிக்​கொண்​டார். கவிதை, மொழிபெயர்ப்பு சார்ந்து 120 புத்​தகங்​களை எழுதி உள்​ளார். வானம்​பாடி இயக்​கத்​தில் மூத்த முன்​னோடி​யாக இருந்​தார். ஆங்​கிலம், ரஷ்யன், மலை​யாளம், ஹிந்தி மொழி நூல்​களை தமிழாக்​கம் செய்​துள்​ளார். திரைப்​படத் துறை​யிலும் கால் பதித்​துள்ள புவியரசு கமலின் இலக்​கிய நண்​பர். இவர் எழு​திய ‘கையொப்​பம்’ கவிதை தொகுப்​புக்​கும், ‘புரட்​சிக்​காரன்’ வங்க மொழிபெயர்ப்பு நூலுக்​கும் 2 முறை சாகித்ய அகாடமி விருதை பெற்​றவர்.

SCROLL FOR NEXT