தமிழகம்

தனியார் பல்கலை. மசோதாக்கள் வாபஸ்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்​நாடு தனி​யார் பல்​கலைக் கழகங்​கள் பட்​டியலில் 7 புதிய பல்​கலைக்​கழகங்​களை சேர்ப்​பது தொடர்​பான பல்​கலைக்​கழக சட்​டத் திருத்த மசோதா சட்​டப்​பேர​வை​யில் 2023-ல் நிறைவேற்​றப்​பட்​டது. அதே​போல, தமிழகத்​தில் தனி​யார் பல்​கலைக்​கழகங்​களை புதிதாக நிறு​வும் வகை​யில், நிலஅளவு உள்​ளிட்​ட​வற்​றில் சலுகை வழங்​கி 2025-ல் மசோதா நிறைவேற்​றப்​பட்டது.

மாநக​ராட்​சி, நகராட்​சிப் பகு​தி​களில் குறைந்த அளவு நிலம் இருந்​தாலே பல்​கலைக்​கழகம் அமைக்க முடி​யும் என்று இந்த சட்​டத் திருத்த மசோ​தா​வில் கூறப்​பட்​டிருந்​த​தால், எதிர்க்​கட்​சிகள் எதிர்ப்பு தெரி​வித்​தன. இந்​நிலை​யில், நேற்று இந்த சட்ட மசோ​தாக்​கள் திரும்​ப பெறப்​பட்​டன.

          
SCROLL FOR NEXT