தமிழகம்

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஈரம் காயாத அளவுக்கு தொடர்ந்து மழை பெய்யும்: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

செய்திப்பிரிவு

திருச்சி: சென்னை உள்​ளிட்ட மாவட்​டங்​களில் ஈரம் காயாத அளவுக்கு மழை தொடரும் என்று தனி​யார் வானிலை ஆய்​வாளர் ந.செல்​வகு​மார் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறிய​தாவது: மரக்​காணம் அருகே நேற்று கரை கடந்து செயலிழந்த காற்​ற ழுத்த தாழ்வு மண்​டலம், மத்​தியமாவட்​டங்​கள் வழி​யாக கேரள பகு​திக்​குள் நகர்ந்​து, அரபிக்​கடலில் இறங்​கியது.

இது கர்​நாடகப் பகுதி வரை நீடித்​திருந்​த​தால் நேற்று இரவு வரை தொடர்ந்து இடி, மின்​னலுடன் கூடிய மழைப்​பொழிவை கொடுத்​தது.

அரபிக்​கடலில் தீவிரமடைந்து மேற்கு நோக்கி நகரும்​போது கிழக்கு காற்றை ஈர்க்​கும் என்​ப​தால், இன்று (டிச. 4) அதி​காலை முதல் கடலோர மாவட்​டங்​களில் ஆங்​காங்கே மழை இருக்​கும்.

பின்​னர் சில இடங்​களில் வெயிலும், வெளிச்​ச​மும் வந்து வெப்​பம் உயர்ந்த பிறகு, அனைத்து மாவட்​டங்​களி​லும் ஆங்​காங்கே மித​மானது முதல் சற்று கனமழை வரை பெய்​யும். ஓரிரு இடங்​களில் கனமழை​யும், ஓரிரு இடங்களில் மிக கனமழை​யும் இருக்​கும்.

நாளை மாலை நேரத்​தில் ஆங்​காங்கே மித​மானது முதல் சற்று கனமழை இருக்​கும். மொத்​தத்​தில் சென்னை உள்​ளிட்ட மாவட்​டங்​களில் ஈரம் காயாத அளவுக்கு மழை தொடரும்.

புதி​தாக ஒரு காற்று சுழற்சி இலங்கை மற்​றும் தென் மாவட்​டங்​கள் வழி​யாக அரபிக்​கடல் நோக்கி நகர​விருப்​ப​தால் வரும் 6, 7-ம் தேதி​களில் அனைத்து மாவட்​டங்​களி​லும் சற்று கூடு​தலாக மழைப்​பொழிவு இருக்​கும். தொடர்ந்து சில நாட்​களுக்கு மழைப்​பொழிவு இருக்​கும். இவ்​வாறு ந.செல்​வகு​மார் தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT