லயோலா மணி
வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கிடங்கை தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லயோலா மணி நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள பாடநூல் கழக கிடங்குகளை ஆய்வு செய்து வருகிறேன். சில இடங்களில் பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு உள்ளதாக கூறப்பட்டது. அரசு பள்ளிகளில், மாணவர்சேர்க்கை அதிகரித்ததால், சில குறைகள் இருந்தன. அவை சரிசெய்யப்பட்டு விட்டன. கடந்த ஆட்சிகளில், பாடப்புத்தங்கள் ஆந்திராவில் அச்சிடப்பட்டன.
பாடப்புத்தங்களை சிவகாசியில் அச்சிடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படுமா? என்பது குறித்து கலந்தாய்வு நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக உள்ளார். அதனால், தமிழக அச்சகங்களில் புத்தகங்கள் அச்சிட அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. கோவை மாணவர் கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டம் தன் கடமையை செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.