சென்னை வால்​டாக்ஸ் சாலை​யில் ஓட்​டல் பயன்​பாட்​டுக்​காக 3 சக்கர சைக்​கிளில் கொண்டு செல்​லப்​படும் விறகு. | படம்: ச.கார்​த்​திகேயன் |

 
தமிழகம்

வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: ஓட்டல்களில் விறகு பயன்பாடு அதிகரிப்பால் விலை உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை: வணிக காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாடு காரண​மாக ஓட்​டல்​களில விறகு பயன்​பாடு அதி​கரிப்​ப​தால் அதன் விலை ஒரு குண்டு ரூ.320-லிருந்து ரூ.500 வரை உயர்ந்​துள்​ளது.

அமெரிக்​கா- ஈரான் இடையி​லான போர் காரண​மாக இந்​தியா முழு​வதும் சமையல் காஸ் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. வணிக சிலிண்​டர்​கள் கிடைப்​பது அரி​தாகி​விட்​டது. ஊரகப் பகு​தி​களில் வீட்டு உபயோக சிலிண்​டர் பதிவு செய்து பல நாட்​கள் காத்து கிடக்​கின்​றனர்.

          

அடுத்த சிலிண்​டர் பதிவு செய்​வதற்​கான இடைவெளி 21 நாட்​களாக இருந்​தது, நகர்ப்​புறங்​களில் 25 நாட்​களாக​வும், ஊரக பகு​தி​களில் 45 நாட்​களாக​வும் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

வீட்டு உபயோக சிலிண்​டரை நிரப்​புவதற்கு பதிவு செய்ய ஐவிஆர்​எஸ், ஆயில் நிறுவன செயலி, மிஸ்டு கால் என பல்​வேறு முறை​களில் முயன்​றும் பதிவு செய்ய முடிய​வில்லை என பொது​மக்​கள் புகார் தெரி​வித்து வரு​கின்​றனர்.

வணிக சமையல் காஸ் கிடைக்​காத​தால், பல ஓட்​டல்​கள் மூடப்​பட்​டன. சில ஓட்​டல்​களில் உணவு தயாரிப்பு அளவு குறைப்​பு, 4 வகை பொரியல், 3 வகை சட்னி கொடுக்​காமல் ஒரே வகை பொரியல், சட்னி கொடுப்​பது என சிக்கன நடவடிக்​கைகளை மேற்​கொண்​டுள்​ளன.

சில ஓட்​டல்​கள் விறகு அடுப்​பு​களை பயன்​படுத்தி உணவு தயாரித்து வரு​கின்​றன. மேலும் மாணவர் தங்​கும் விடு​தி​கள், பயணி​யர் தங்​கும் விடு​தி​கள், தரை தளம் மட்​டும் கொண்ட தனி வீடு​கள் போன்​றவற்​றில் சுடு​தண்​ணீர் காய வைக்​க​வும், டீக்​கடைகள் பலவற்​றி​லும் விறகு அடுப்​பு​களை பயன்​படுத்த தொடங்​கி​யுள்​ளனர்.

இதனால் சென்​னை​யில் விறகு அடுப்​பு​களின் பயன்​பாடு அதி​கரித்​திருப்​ப​தோடு, விறகு​கள் பயன்​பாடு அதி​கரித்​து, அதன் விலை உயர்ந்​துள்​ளது. சென்னை மாநகரின் பல்​வேறு பகு​தி​களில் 3 சக்கர சைக்​கிள்​களில் சிறு கடைகளுக்கு விறகு​கள் கொண்டு செல்​வது அதி​கரித்​துள்​ளது.

இது தொடர்​பாக மூலக்​கொத்​தளம் பகு​தியை சேர்ந்த மர வியா​பாரி​களிடம் கேட்​ட​போது, “இதற்கு முன்பு ஒரு குண்டு (25 கிலோ) சவுக்கு விறகு கிலோ ரூ.320 முதல் ரூ.350 வரை விற்​கப்​பட்​டது.

இப்​போது பெரிய ஓட்​டல்​காரர்​கள் காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் உள்ள சவுக்கு தோப்​பு​களுக்கு நேரடி​யாக சென்று விறகு​களை வாங்க தொடங்​கி​யுள்​ளனர்.

இதனால் விறகு பற்​றாக்​குறை ஏற்​பட்டு ஒரு குண்டு இப்​போது ரூ.500 வரை உயர்ந்​துள்​ளது. உயர்ந்​துள்​ளது. வரும் நாட்​களில் மேலும் உயர வாய்ப்​புள்​ளது” என்​றனர்.

SCROLL FOR NEXT