தமிழகம்

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய், தலைவர்கள் வாழ்த்து

தமிழினி

சென்னை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விஜய்: “இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் இந்தியத் திருநாட்டிற்கான தங்களின் அர்ப்பணிப்பான சேவை மேலும் சிறக்க இந்த இனிய நாளில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று எக்ஸ் பக்கத்தில் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மிக எளிய சூழலில் இருந்து நாட்டின் முதல் குடிமகளாக நீங்கள் உயர்ந்த பயணம், பலருக்கும் ஒரு உத்வேகம். பணிவும், விடாமுயற்சியும், மன உறுதியுமே தங்களின் பொதுவாழ்வின் அடையாளங்கள். நீங்கள் நல்ல உடல்நலத்தோடும், மனமகிழ்ச்சியோடும் நீண்ட காலம் சிறப்பாக வாழ உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி: அதேபோல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீண்ட ஆயுள், உடல் நலத்துடன் தாங்கள் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்.” எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT