தமிழகம்

ஜவுளி பூங்கா இருப்பதுபோல கதர் ஆடை பூங்கா அமைக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ஜவுளித்​துறைக்கு ஜவுளி பூங்கா இருப்​பது​போல், கதர் ஆடை பூங்கா அமைக்க வேண்​டும் என்று தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் வலி​யுறுத்​தி​னார்.

சட்​டப்​பேர​வை​யில் நேற்று கைத்​தறி மற்​றும் துணிநூல், கதர், தொழிலா​ளர் நலன், சிறு,குறு, நடுத்தர தொழில் நிறு​வனங்​கள் ஆகிய துறை​களின் மானியக் கோரிக்​கைகள் மீதான விவாதத்​தில் தேமு​திக உறுப்​பினர் பிரேமலதா விஜய​காந்த் பேசி​ய​தாவது:

கைத்​தறி நெச​வாளர்​கள் பல்​வேறு பிரச்​சினை​களை எதிர்​கொண்​டுள்​ளனர். தவெக தேர்​தல் வாக்​குறுதி அளித்​த​படி, நெச​வாளர் ஓய்​வூ​தி​யத்தை ரூ.1,000-ல் இருந்து ரூ.3 ஆயிர​மாக உயர்த்தி வழங்க வேண்​டும்.

கைத்​தறி ஆடைகளுக்கு தனி​நபர்​கள் விலை நிர்​ண​யம் செய்ய முடி​யாது. அரசு​தான் விலையை நிர்​ண​யிக்க வேண்​டும். தறிகளுக்கு வழங்​கப்​படும் 1000 யூனிட் இலவச மின்​சா​ரத்தை உயர்த்தி வழங்க வேண்​டும். கைத்​தறி தளவாடங்​களுக்கு கூடு​தல் மானி​யம் வழங்க வேண்​டும்.

தன் வாழ்​நாள் முழு​வதும் கதர் ஆடைகளையே அணிந்து எல்​லோருக்​கு்ம் முன்​மா​திரி​யாக திகழ்ந்​தவர் விஜய​காந்த். ஜவுளித்​துறைக்கு ஜவுளி பூங்கா இருப்​பது​போல், கதர் ஆடை பூங்கா அமைக்க வேண்​டும். கதர் ஆடைகளை பிரபலப்​படுத்த பேஷன் ஷோக்​கள் நடத்த வேண்​டும்.

இந்​தி​யா​வில் உப்பு உற்​பத்தி அதிக அளவில் நடை​பெறும் இடம் தூத்​துக்​குடி​தான். அங்​குள்ள உப்​பளங்​கள் மூலம் ஆண்​டுக்கு 5 லட்​சம் டன் அளவுக்கு உப்பு உற்​பத்தி செய்​யப்​படு​கிறது.

தூத்​துக்​குடி முள்​ளக்​காடு பகு​தி​யில் புதி​தாக செயல்​படுத்​தப்பட இருக்​கும் கப்​பல் கட்​டும் திட்​டத்​தால் ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட உப்​பளத் தொழிலா​ளர்​கள் பாதிக்​கப்​படும் அபா​யம் உள்​ளது. அவர்​களை பாது​காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு பிரேமலதா பேசி​னார்.

SCROLL FOR NEXT