சென்னை: தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று திருத்தணி, நாளை பல்லாவரம், நாளை மறுநாள் குடியாத்தம், 4-ம் தேதி போளூர், 5-ம் தேதி மைலம், 6-ம் தேதி விருத்தாசலம், 10-ம் தேதி தருமபுரி, 11-ம் தேதி ஓமலூர், 12-ம் தேதி சேலம் மேற்கு ஆகிய தொகுதிகளில் முறையே கிருஷ்ண மூர்த்தி, அனகை முருகேசன், பிரதாப், சரவணன், வெங்கடேசன், பிரேமலதா, இளங்கோவன், ஏ.ஆர் இளங்கோவன், அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோரை ஆதரித்து பிரேமலதா பிரச்சாரம் செய்கிறார். 13, 14-ல் மீண்டும் விருத்தாசலத்தில் பிரச்சாரம் செய்கிறார்.
15-ல் சென்னை சட்டமன்றதொகுதியிலும், 16, 17-ல் விருதுநகரில் விஜயபிரபாகரனை ஆதரித்தும், 18 முதல் 21-ம் தேதி வரை மீண்டும் விருத்தாசலத்திலும் பிரச்சாரம் செய்கிறார்'’ என கூறப்பட்டுள்ளது.