சென்னை: தேமுதிக வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 28) வெளியிடப்பட்டுள்ளது. விருத்தாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்த், விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டியிடுகின்றனர்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது அக்கட்சியின் சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று (மார்ச் 28) வெளியிட்டுள்ளார்.
வேட்பாளர்கள் பட்டியல் விவரம்:
விருத்தாசலம் - பிரேமலதா விஜயகாந்த்
தருமபுரி - V.இளங்கோவன்
சேலம் மேற்கு - அழகாபுரம்.R.மோகன்ராஜ்
விருதுநகர் - வி.விஜய பிரபாகர்
ஓமலூர் - ஏ.ஆர்.இளங்கோவன்,
மைலம் - எல்.வெங்கடேசன்
பல்லாவரம் - அனகை.D.முருகேசன்
திருத்தணி - D.கிருஷ்ணமூர்த்தி
குடியாத்தம் (தனி) - K.B.பிரதாப்
போளூர் - T.P. சரவணன்