சென்னை: ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப்பொறுங்கள் என தேர்தல் முடிவுகள் குறித்து பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கருத்துக்கணிப்பை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப் பொறுங்கள்; எல்லாம் முடிந்து இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது.
மே 4-ம் தேதி காலை 8 மணிக்கு ஆரம்பித்தால் மாலை 5 மணிக்குள் ரிசல்ட் தெரியப் போகிறது. அதற்கு அதீத எதிர்பார்ப்பும், கற்பனையும் தேவையில்லை. நிச்சயம் எல்லோருக்கும் நல்லதே நடக்கும்.
மதச்சார்பற்ற வெற்றிக்கூட்டணியில் போட்டி போடுகிறோம். உறுதியாக எங்களுடைய கூட்டணி அமோக வெற்றி பெறும்.
இன்னும் 2 நாட்கள் தான் இருக்கிறது. எல்லோரும் களத்தில் மிக தீவிரமாக பணியாற்றி இருக்கிறார்கள். மே 4-ல் நிச்சயமாக வெற்றி வரும். நிச்சயமாக நான் உங்களை அழைத்துப் பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார்.